பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 235。

‘மிதிவண்டியின் வரலாறு', 'தொத்து நோய்களே நீக்க வழி. கண்ட பெரியார்கள்', 'விண் வெளிச் செலவு’ என்பன போன்ற தலைப்புக்களில் பேசும் வாய்ப்புக்களைத் தரலாம். சமூக இயல் கழகத்தில் சமயப் பெரியார்கள், விடுதலை நல்கிய வீரர்கள், வரலாற்றுச் சான்றுள்ள இடங்கள்,: * நடைமுறை அரசியல் பிரச்சனைகள்’ முதலிய தலைப்புக் களில் பேச இடந் தரலாம்.

தாய்மொழிக்கு முதலிடம் அளித்த பிறகு ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு இலக்கியக் கழகமும், பள்ளிக்கென ஒரு பொது இலக்கியக் கழகமும் இருத்தல் இன்றியமையாதது. ஏனேய பாடங்களிலிருக்கும் விருப்பத்தை விட இலக்கியத்திலுள்ள விருப்பம் எல்லோருடைய மனத்தையும் ஈர்க்கும் ஆற்றலுடையதால் இலக்கியத்திற்குத் தனிச் சலுகை காட்டுதல் தவருகாது. அதிகமான மாணுக்கர் களும் இதில் பங்கு கொள்வர். பாடவேளைப் பட்டியிலும் இக்கழகத்திற்கென ஒரு பாட வேளையைக் கட்டாயம் ஒதுக்கித் தரவேண்டும். பொது இலக்கிய கழகத்தில் எல்லா மாளுக்கர்களுக்கும் பேசவேண்டிய பொருளைக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்னரே அறிவித்து விடல் வேண்டும். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தத்தம் வகுப்பில் பேச முன்வரும் மாணுக்கர்களுக்குப் பொருளைக் கோவைப்படுத்திப் பேசுவதிலும், தெளிவாகப் பேசுவதிலும், பேசும் பொருளேப் பற்றிய செய்திகளே மேற்கொள் நூல்கள், தகவல் நூல்கள், பிற நூல்களிலிருந்து திரட்டுவதிலும் துணையாக இருந்து பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி பெற்ற மானுக்கர்களுக்கு மட்டிலும் பொது இலக்கியக் கழகத்தில் எல்லோர் முன்னிலையிலும் பேசும் வாய்ப்புக்கள் அளிக்கப்பெறும். பதினேந்து நாட்களுக் கொருமுறை பொது இலக்கியக் கழகம் கூடினுல் போதும். பதினேந்து நாட்களுக் கொருமுறை வகுப்புக்களில் பேசும் பயிற்சி அளிக்கப்பெறும். பேசும் பொருள்களைப்பற்றிய தகவல்களே அறிய நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தலாம். எல்லோருக்கும் பொதுவான பொருள்கள் பேசப்படும்பொழுதும், வெளியிலிருந்து