பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

含86 தமிழ் பயிற்றும் முறை

பெரியோர்கள் வந்து பேசும்பொழுதும் இலக்கியக் கழக மேடையைப் பயன்படுத்தவேண்டும்.

இந்தக் கழகங்களில் நடைமுறையில் மாணுக்கர்களுக்குப் பொறுப்புக்கள் தரப்பெறுதல் வேண்டும். நல்ல செயலாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கழகங்கள் நன்கு செயற்படும். தாய்மொழி பயிற்றுமொழியாக வந்தபிறகு எல்லா ஆசிரியர்களும் தாய்மொழியாசிரியர்களே என்ற பெரு நோக்கத்துடன் ஒத்துழைத்தால் இக் கழகங்கள் தாய்மொழி வளர்ச்சிக்குப் பல்லாற்ருனும் மிகத் திறமையுடன் பணியாற்றும்.

10. திருந்திய பேச்சு

ஒருவர் உள்ளத்தில் தோன்றிய கருத்துக்களைப் .பிறருக்கு எடுத்துக் கூறும் நோக்கத்துடனேயே மொழி மக்களால் படைத்துக்கொள்ளப் பெற்றது. மக்களது மனத்தில் எழும் கருத்துக்களே வெளியிடுவதற்குக் குறியிடுகளாகக்கொண்ட சொற்களின் தொகுதியே மொழி என்று கூறலாம். பேசுவோரின் மொழி திருத்தமாக இருந்தால்தான் கேட்போருடைய உள்ளத்தில் பேசுவோரின் கருத்துக்கள் தெளிவாகப் புலனுகும்.

தெளிவான ஒலிப்பு, திருத்தமான உச்சரிப்பு, இடத்திற். கேற்ற குரல் எடுப்பு ஆகியவை திருந்திய பேச்சின் நல்லியல்புகளாகும். பேசும்பொழுது விரைவு, அச்சம், கூச்சம், படபடப்பு முதலியனவையின்றித் தன்னம்பிக்கையுடனும் உணர்ச்சி ததும்பவும் பேசினல் பேச்சு சிறக்கும். தெள்ளியதீந்தமிழ்ச் சொற்களைக்கொண்ட சிறுசிறு வாக்கியங்கள் பேச்சில் அமைதல் மிகவும் வேண்டற்பாலது. பேசுங்கால் உடலாட்டம், உறுப்பசைவு முதலியவை கூடா. திக்கல், திணரல், ஊடே ஆ ஊ என ஒசையிடல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். பேசுவோரின் பேச்சில் கூறியது கூறல், மாறுபடக் கூறல், குன்றக் கூறல், மிகை