பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழ் பயிற்றும் முறை

பெற்ருேர்களின் பேச்சும் மற்ருேர்களின் பேச்சும் வீட்டில் குழந்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்றவாறு அமையவேண்டும். அடிக்கடி ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்ருேர்களுடைய தொடர்பு பெற்றுக் குழந்தைகளின் திருத்தமான பேச்சில் அவர்களின் ஒத்துழைப்பை நாடவேண்டும். சில குழந்தைகள் மூக்கடைச் சதை (Adenoids) தொண்டைச்சதை (Tonsii) ஆகியவற்றின் காரணமாகச் சரியாக உச்சரிக்காதிருத்தல்கூடும். அவற்றைத் தக்க அறுவை முறை சிகிச்சையால் போக்குமாறு பெற்ருேருக்கு யோசனை கூறுதல்வேண்டும். இயல்பாகச் சில குழந்தைகளிடம் காணப்பெறும் சோர்வு, நரம்புமிகு கிளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி முதலியவற்றை ஏற்ற மருந்துக்களாலும், ஒய்வு கொடுத்தலாலும் நீக்கவேண்டும். வேறு காரணங்கள் இருந்தால் அவற்றையும் போக்கவேண்டும்.

சில இடையூறுகளால் சரியாக உச்சரித்துப் பேச இயலாத குழந்தைகளின் மனம் புண்படும்வகையில் குறைகளே எடுத்துக் காட்டி ஏளனம் செய்தலாகாது. பிழை செய்பவர்களைச் சுட்டிக்காட்டாமல் பிழைகளைப் பொதுவாக வகுப்புக்கு எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்தலாம். நரம்புத் தளர்ச்சியுள்ள ஒரு குழந்தையின் குறைகளே நீக்குவதற்கு வகுப்பு மாணுக்கர்களில் ஒரு சிலருக்கு உச்சரிப்புப் பயிற்சிகளைக் கொடுத்து அவர்கள் பெறும் பயிற்சியினைக் காணச் செய்தல் வேண்டும். எக் காரணத்தாலும் நரம்புத் தளர்ச்சியுள்ள குழந்தையின் குறைகளைத் தனியாக எடுத்துக்காட்ட லாகாது. இத்தகைய குழந்தைகளைக் கைவேலை, வரைதல், ஒவியம், எழுத்து வேலை போன்ற துறைகளில் அமர்த்தி மொழிவாயிலாக வெளிப்படுத்த இயலாத எண்ணங்களே இச்செயல்களின் மூலம் வெளிப்படுத்தலாம்.

வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகளே அதிகமாகக் கடிந்து பயமுறுத்துவதால் அவர்கள் மனம்விட்டுத் தாராளமாகப் பேசுவதில்லை. துணிவாகவும் தாராளமாக