பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 289°,

கட்டளைகளைப் பெரிய எழுத்துக்களால் அட்டையில் எழுதி மாட்டி வைக்கலாம். கதவைத் திற , சன்னலே மூடு , ' கால் கழுவு , தலை வாரு , வரிசையாகப் போ’ என்பன போன்றவற்றை எழுதலாம். அவற்றின்படி குழந்தைகள் நடக்காவிட்டால், அவைகளே அவர்களுக்குப் படித்துக் காட்டலாம் ; பிறகு படிக்கச் செய்யலாம். படிப்பதற்கு, ஆவல் ஊட்டக் கூடிய சாதனங்கள் வகுப்பறையில் இருக்க வேண்டும். சிறிய கதைகள், விளையாட்டுக்கள், பாப்பாப் பாடல்கள், செயல் முறைகள் ஆகியவற்றைப் படங்களால் விளக்கிப் பெரிய எழுத்துக்களால் எழுதி வகுப்பறைகளில் தொங்கவிடலாம். -

இம்முறை இயற்கையானது ; இது குழந்தைகள் உற்சாகத்துடன் படிப்பதற்குத் துணைபுரிகின்றது. குழந்தைகள் தங்களுக்கு விளங்கக்கூடியவற்றையும் தாங்கள் விரும்பு வனவற்றையும் கற்பதால், கற்றலில் அவர்களுக்கு நல்ல பற்று உண்டாகின்றது. முழுப் பொருளைக் குழந்தைகள் தம் புலனுணர்ச்சிகளால் அறிந்து அதன் பகுதிகளைக் கற்பது போலவே, முழுச் சொற்ருெடர்களை முதலில் கற்று, பிறகு சொற்களைக் கற்கின்றனர். ஆதலால் இது குழந்தையின் உள்ளத்திற்கு ஏற்ற முறை என்பதற்குத் தடையில்லை. இம்முறையில் படிக்கப் பழகினல், பார்வையை யொட்டிப் பழகும் காரணத்தால் பல சொற்கள் குழந்தைகளின் மனத்தில் நன்கு பதியும்; தெளிவுடன் கருத்துணர்ந்து படிக்கும் திறமையும் அவர்களுக்கு ஏற்படும்.

இம்முறையில் பாடப்புத்தகங்களே எழுதிக் கற்பித்தலில் ஒழுங்கில்லேயென்றும், சொற்களஞ்சியத்தைப் படிப்படியாக எளிமையிலிருந்து அருமைக்குப் பெருக்கிக்கொண்டு போக வழியில்லை யென்றும், ஒரு திட்டமான முறைப்படி அச்சிட்ட பாடப் புத்தகத்தைப் படிப்பதற்கு இஃது . ஈடாகாது என்றும் சில குறைகளும் காட்டப்பெறும். அவை ஓரளவு உண்மையேயாயினும், குழந்தைகள் படிப்பில் காட்டும் உற்சாகம் காரணமாக அக் குறைகள் நீங்கும்.