பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு £271

நடத்திக் காட்டாத ஆசிரியரின் குறையென்றே சொல்ல வேண்டும். இம் முறையில் இறுதிநிலை வரையிலும் விடாது பயின்ற குழந்தைகளும் எழுத்துக் கூட்டுதலில் திறமையற்றவர்களாக இருப்பர் என்று சொல்லுவதற்கில்லே. ஒரோவழி சில குழந்தைகளிடம் அக்குறை காணப்பட்டால் அவர்களிடம் தனிக் கவனம் செலுத்தி ஆசிரியர் அதனேக் களையலாம். ஒலிபிறப்பியலுக்கு ஒத்த எழுத்துக்களில்லாத ஆங்கில மொழியில் அக்குறை எழ இடமுண்டு; தமிழ் மொழியில் அதற்குச் சிறிதும் இடமே இல்லை.

பல சொற்களைத் தொடர்ந்து ஒரே காலத்தில் உச்சரித்துக் கருத்துணர்ந்து படிக்கக் கற்றுக்கொள்வது குழந்தைகளுக்கு எளிதன்று என்று பிறிதொரு குறையும் காட்டப்படுகின்றது. ஆணுல், முழுச் சொற்ருெடர்களாகப் பேசுவதே இயல்பான முறை; உளவியல் உண்மைக்கும் ஏற்றது. அன்றியும், குழந்தைகளின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் பட்டறிவுக்கும் உட்பட்ட பொருள்கள்பற்றியே பாடங்கள் அமைவதால் அவற்றைப் படித்துக் கருத்துணர்தல் அருமையாக இராது.

(w) கதை முறை : கதைகளின் வாயிலாகப் படிப்பு கற்பிப்பதைக் கதை முறை என்று சொல்லுகின்ருேம். இது சொற்ருெடர் முறையின் விரிவேயாகும். சொற்ருெடர் முறையில் கதையைக் கற்பிப்பதுதான் கதைமுறை. ஒரு கதையைப் பல சிறு சொற்ருெடர்களால் அமைத்துத் தொடர்ச்சியாகக் கற்பிக்கலாம். கதையை ஓரளவு முன்னதாகவே அறிந்துள்ள குழந்தைகள் சொற்ருெடர்களைத் தெரிந்து கற்பர். சொற்ருெடர்களே அறிந்த பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சொற்களே அறியத் துணிவர் ; சொற்களே யறிந்த பிறகு எழுத்துக்களே அறியத் தொடங்குவர். எனவே, கதை முறை என்பது சொற்ருெடர் முறை, சொல் முறை, எழுத்து முறை ஆகியவற்றை உறுப்புக்கவளாகக் கொண்ட முறையே என்பது அறியப்படும்.