பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 2 தமிழ் பயிற்றும் முறை

தோறும் வழங்காச் சொற்களைப் பொதுவாக உணர்வார்களேயன்றி, அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் மிகுதியாக வைத்து வழங்கார். அவை பெரும்பாலும் செய்யுட் பாடங்களிலும் ஒரோவழி உரைநடைப் பாடங்களிலும் வரலாறு, அறிவியல் போன்ற சில பாடங்களில் சில விடங்களிலும் பயின்று வரும்.

முதல் ஐந்து வகுப்புக்களில் நாள்தோறும் வழங்கும் சொற்களின் பட்டிகள், அவற்றுள்ளும் அடிக்கடிப் பயின்று வரும் சொற்களின் பட்டிகள், நாள்தோறும் வழங்காச் சொற்களின் பட்டிகள் ஆகியவற்றை நன் முறையில் ஆராய்ந்து தொகுக்கவேண்டும். தமிழில் இதுகாறும் ஆய்வுகள்மூலம் ஆயத்தம் செய்த பட்டிகள் தோன்ற வில்லை. ஆங்கில மொழியில் பல பட்டிகள் தயார் செய்யப் பெற்றுள்ளன. அம்முறைகள் தமிழ்ச்சொற் பட்டிகள் தயார் செய்வதற்கு வழிகாட்டிகளாக அமையலாம். அங்ங்னம் ஆயத்தம் செய்யப்பெற்று இன்று எங்கும் பெருவழக்காக இருப்பது தார்ன்டைக் என்பார் திரட்டிய ஆசிரியர் சொற்புத்தகம் ' என்ற பட்டியாகும். அதில் ஆங்கில மொழியில் அடிக்கடி வழக்கத்தில் பயன்படும் 10,000 சொற்கள் திரட்டப்பெற்றுள்ளன. அவை சற்றேறக்குறைய நாலரை இலட்சம் சொற்களடங்கிய புத்தகங்களே யெல்லாம் ஆராய்ந்து திரட்டப்பெற்றவை. அப் புத்தகங்களில் விவிலியம், முக்கிய ஆங்கில உயர்தர இலக்கியங்கள் (Classics), குழந்தைகளால் முக்கியமாகப் படிக்கப்பெறும் புத்தகங்கள், வளர்ந்தவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்பெறும் வழிகாட்டி நூல்கள், செய்தித்தாள்கள், கடிதங்கள் போன்றவை அடங்கும். அவ்வாறு தொகுக்கப்பெற்ற 10,000 சொற்களும் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொல். லுக்கும் அருகே காணப்பெறும் எண் அஃது அடிக்கடி பயிலப்பெறும் பான்மையைக் காட்டும். அதனல் சொல்லின்

  • Thorndike, E. L. : The Teacher's Word Book. {New York Columbia University)