பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 18 தமிழ் பயிற்றும் முறை

ஆகியவற்றிலுள்ள சொற்ருெடர்களே அப்படியே எழுதும் பயிற்சியைத் தரலாம். இவற்றில் ஓரளவு திறமை கைவரப்பெற்ற பிறகு, இரண்டாம் வகுப்பிலிருந்து பார்த்து எழுதுதலேத் தொடங்கலாம். நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து வரிகள் வீட்டில் எழுதி வருமாறு வற்புறுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று கோடுகள் அமைத்த கற்பலகையில் எழுதச் செய்யலாம். சொற்களுக்கு இடையிலும் வரிகளுக்கு இடையிலும் சிறிது இடம்விட்டு எழுதும் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே வற்புறுத்தவேண்டும். எழுத்துக்களுக்குக் கோடுவிடாமல் மொட்டையாக எழுதும் தவருண முறையை அவ்வப்பொழுதே தவிர்க்கும்படி செய்து திருத்த வேண்டும். நிறுத்தற்குறியை விடாமல் குறிக்கப் பழக்கவேண்டும். முக்கியமாக ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முற்றுப்புள்ளியைக் குறிப்பதை வற்புறுத்த வேண்டும்.

இத்தகைய எழுத்துப் பயிற்சியைக் கீழ் வகுப்புக்களில் பத்து மணித்துளிக்குமேல் தருதல் ஆகாது. இளஞ்சிருர்களுக்கு எழுத்து வேலே விரைவில் மனக்களைப்பையும் விரற் சோர்வையும் உண்டுபண்ணுமாதலின் அவர்களே அதிக நேரம் எழுதச் செய்தல் கூடாது. அன்றியும், அஃது அவர்களுக்கு எழுத்தில் வெறுப்பு உண்டாக்கவும் கூடும். தண்டனையாகப் பலமுறை எழுதச் செய்வதை ஆசிரியர் அறவே தவிர்த்தல் வேண்டும்.

பார்த்து எழுதுதலைச் சற்று மாற்றியமைத்து சில பயிற்சிகளைக்கொண்டு விளையாட்டு முறையிலும் கற்பிக்கலாம். ஒருமையைப் பன்மையாகவும் பன்மையை ஒருமையாகவும் மாற்றி எழுதும் பயிற்சிகள், கால வேறுபாடுகளை மாற்றி எழுதும் பயிற்சிகள், ஏற்ற அடைமொழிகளைப் பெயர்களுக்கும் வினைகளுக்கும் கொடுத்துத் தொடர் மொழிகளே விரிக்கச் செய்யும் பயிற்சிகள் முதலியவை இதற்கு மிகவும் ஏற்றவை. கீழ் வகுப்புக்களில் இவை போன்ற மிகவும் எளிய பயிற்சிகளைக் கொடுத்து அவர்க