பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 355

2. சொற்கள்பற்றியவை

சொற்களைப்பற்றிய எத்தனையோ பயிற்சிகள் உள்ளன. ஆசிரியர் அறிவுத் திறனுக்கேற்றவாறு அவற்றைப் பலவித.மாக அமைக்கலாம்.

ஒரு பெரிய படத்தில் குறிப்பிட்ட சொற்களைக் குறிக்கும் படங்களைக் காட்டச் செய்தல்.

(எ-டு) ரூபாய் சட்டி குழி முயல்

பூட்டு விசிறி மச்சு வீடு குடம் பாட்டி பாக்கு வெட்டி தாளம் கெண்டி குருவிக் கூடு போன்றவை.

மற்ருெரு விதமான பயிற்சி பல சொற்களேக் கலந்து கொடுத்துப் பொருத்தமில்லாதவற்றை நீக்கும்படி செய்தல். (எ-டு) ஒவ்வொரு வரிசைச் சொற்களிலும் அந்த வரிசைக்குப் பொருத்தமில்லாத சொல் ஒன்று உள்ளது. அதைக் கண்டுபிடித்து அடித்துவிடு. இலை, பூ, காய், வேர், காகிதம். ஆண்டு, தேதி, தோசை, மாதம், நாள். மா, பலா, தென்னை, இரும்பு, கமுகு.

நெல், சோளம், கம்பு, பிண்ணுக்கு, கேழ்வரகு. 5. தலை, கை, கால், இட்டிலி, வால்.

போன்றவை.

இன்னுெரு வகையான பயிற்சி கொடுக்கப்பெற்றுள்ள

சொற்களே இனப்படுத்தி எழுதச் செய்தல்.

(எ-டு) பின்வருவனவற்றைப் பறப்பவை, நடப்

பவை, நீந்துபவை, ஊர்பவை ஆகிய பிரிவு களாக வரிசைப்படுத்தி எழுதுக.