பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 369

(ஆ) வினைச்சொல்லின் காலத்தில் மாறுபாடு

(எ-டு.) 1. நேர்; கந்தன், ' நான் படித்துக் கொண்

டிருந்தேன் ” என்று கூறினன். நேரல் : கந்தன் தான் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறினன்.

2. நேர் : கந்தன், "நான் படித்துக்கொண்டிருக்

கின்றேன் ” என்று கூறுகின்றன். நேரல் : கந்தன் தான் படித்துக்கொண் டிருக்கின்றதாகக் கூறுகின்ருன்.

3. நேர் : கந்தன், ' நான் படித்துக்கொண்

டிருப்பேன் ” என்று கூறுவான். நேசல் : கந்தன் தான் படித்துக்கொண் டிருப்பதாகக் கூறுவான்.

இந்த எடுத்துக்காட்டுக்களினல், துணைநிலை வாக்கியத்தின் வினைமுற்றுச் சொல் எக்காலத்தைச் சார்ந்ததோ அதே காலத்திலேயே முதன்மை வாக்கியத்திலுள்ள வினைச்சொற்களை நேரல் கூற்றில் மாற்றியமைக்க வேண்டும் என்பதை அறிக. (ஆயினும், தமிழ் மொழியில் படித்துக் கொண்டிருப்பதாக என்பதையே முதலிரண்டு நேரல் கூற்று எடுத்துக்காட்டுக்களிலும் அமைத்துக் கூறினும் தவருகாது.) இவற்றுள் நேர்கூற்றில் முதன்மை வாக்கிய வினைமுற்று இறந்த காலமாயின், நேரல் கூற்றில் உள்ள வினையை இறந்தகால வினேச்சொல்லாக அவசியம் மாற்ற வேண்டும். சூரியன் கிழக்கில் உதிக்கும்’, தீச்சுடும் என்பனபோல முக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களே இறந்த காலத்தில் மாற்றி அமைக்க வேண்டுவதில்லை.

ஒருவர் பேசிய பின்னரே அப்பேச்சை நாம் கொண்டு கூறுகின்ருேமாதலின், நேர் கூற்றில் முதன்மை வாக்கிய விஜனமுற்றுச் சொல் நேரல் கூற்றில் பெரும்பாலும் இறந்த காலத்ததாகவே இருக்கும்.

த-25