பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 373

கலை -ஆண்மான் வலி - வலிமை களை -அயர்வு வளி~ காற்று கழை-மூங்கில் வழி - பாதை

என்பன போன்றவை.

னகர-னகர வேறுபாடு

வண்மை-கொடை வன்மை -வலிமை

ஊன் -மாமிசம் ஊண் -உணவு நாண் -வெட்கம் நான் -யான்

மன்ை -ஆசனம் மனை -வீடு

என்பன போன்றவை.

(ii) வாக்கியம் பற்றியவை : ஒரு பத்தியில் உள்ள வாக்கியங்களுள் ஒவ்வொன்றுக்கும் பொருள் தொடர்பு இருத்தல் வேண்டும். வாக்கியத்திலிருக்கும் சொற்கள் தத்தமக்கு உரிய சொற்களோடு முடிதல் வேண்டும். இவ்வாறு அமையாத வாக்கியம் பிழை உடையது. இத்தகைய பிழையான வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் பிழைகளைத் திருத்தும்படி பயிற்சிகள் தரலாம்,

(எ-டு.) 1. சோழவளநாடு ஆகையால் காவிரிப் பாய்ச்ச. லால் நெல் மிக்க விளைவு உள்ளது என்பது எக்காலத்தும் உண்மைச் செய்தியாம்?. -

இவ்வாக்கியத்தில் ஆகையால் என்னும் சொல் இருத்தல் அமைதியன்று. அதனை நீக்கி விடவேண்டும்.

2. நீ குறிப்பிட்ட காலத்தில் அங்கு வர முயற்சிக் கின்றேன் :