பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380) தமிழ் பயிற்றும் முறை

எழுதுதல் வேண்டும். இவ்வாறு சில சொற்கள் வழங்கு மாற்றையும் மொழிப்பயிற்சியாகக் கொள்ளலாம்.

(அ) வருதல், போதல்

வருதல் என்னும் சொல்லைத் தன்மை முன்னிலைகளி லும், போதல் என்னும் சொல்லைப் படர்க்கையிலும் வழங்குதல் வேண்டும்.

(எ-டு)

தன்மை

நீ எங்கள் வீட்டிற்கு எப்பொழுது வந்தாய் ? முருகன் என்னிடம் வருவான்.

முன்னிலை நான் நேற்று உங்கள் வீட்டிற்கு வங்தேன். முருகன் உன்னிடம் வருவான்.

படர்க்கை நீ கல்கத்தாவுக்கு எப்போது போவாய் ? நான் கல்கத்தாவுக்கு அடுத்தவாரம் போவேன்.

பகைவர் போர்புரிய வருதலை யறிந்த செழியன் அமைச்சரையும் படைத்தலைவரையும் வருவித்து அவர்க்குத் தன் கருத் தினைத் தெரிவிக்கலாஞன்.

இராமர் காட்டிற்குப் புறப்பட்டதை யறிந்து சீதையும் இலக்குவனும் அவரைப் பின்தொடர்ந்து போயினர்.

(ஆ) தருதல், கொடுத்தல் தருதல் என்னும் சொல்லைத் தன்மை முன்னிலைகளிலும்,

கொடுத்தல் என்னும் சொல்லப் படர்க்கையிலும் வழங்குதல் வேண்டும்.