பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 3.81

(எ-டு) அவர் எனக்கு ஒரு புத்தகம் தந்தார். அவர் உனக்கு என்ன தந்தார் ? வடகலிங்கத்தரசன் இரு முறை திறை தந்திலன். உன் புத்தகம் யாருக்குக் கொடுத்தாய் ? நான் என் நண்பனிடஞ் சென்ருல், அவன் எனக்குப் பல வகைப்பட்ட உணவுகளைத் தருவான்.

அரசன் உமக்குத் தந்த அரசை வஞ்சனையாற் கவர்ந்து உம்மைக் காட்டுக்குப் போக்கினுளே !

புலி முதலிய கொடிய விலங்குகளும் தம் இளங்குருளைகட்கு இரைதேடிக் கொணர்ந்து கொடுக்கும்.

(இ) அழைத்தல்

அழைத்தல் என்னும் சொல், தம்மிடம் வருமாறு ஒருவரை மரியாதையாக வேண்டிக்கொள்ளுமிடத்தும், அவ்வாறு கூட்டிக்கொண்டு செல்லுமிடத்தும் கையாளுதற்கு உரியது.

(எ-டு) கங்கைக் கரையில் தவம் புரிந்திருந்த முனிவர்கள் அவர்களே (இராமர் முதலியோரை)த் தங்கள் பர்னசாலைக்கு அழைத்துப் போயினர்’ என்பது காண்க.

இராஜ ராஜேசுரம் என்பது இக்காலத்தில் தாராசுரம் என்று அழைக்கப்படுகின்றது என்பது தவறு வழங்கப் படுகின்றது என்பது சரி.

(ஈ) ஓர், ஒரு உயிர் முதன் மொழிவரும்போது ஒன்று (ஒரு) என்பது ஓர் என்று திரிந்து நிற்கும் : மெய் முதன்மொழி வரும்போது ஒரு என்று நிற்கும்." -

(எ-டு) ஒர் ஊர் ; ஓர் அரசன் ; ஒரு குதிரை.

  • ஆங்கிலத்தில் an என்றும், a என்றும் வருதலே இவற். றுடன் ஒப்பிடுக. -