பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 தமிழ் பயிற்றும் முறை

(iii) உவமை உருவகப் பயிற்சிகள் : உவமையை உருவகமாக மாற்றும் பயிற்சியையும் மொழிப் பயிற்சியாகக் கொள்ளலாம். உவமையணியில் உபமானம், உபமேயம் ஆகிய இரண்டும் வேறு வேறு பொருள்களாக இருக்கும். உருவக அணியில் உபமான உபமேயங்களின் வேற்று. மையை ஒழித்து அவ்விரண்டும் ஒன்று என்று கூறப்படும். - எடுத்துக்காட்டாக மதிமுகம் என்பது உவமையணி : இது மதிபோன்ற முகம் என விரியும். மதிமுகம்’ என்ற தொடர் உருவக அணியில் 'முகமதி என்றிருக்கும். இது "முகமாகிய மதி' என விரியும்.

உவமையணியில் உபமானச்சொல் முன்னும், உபமேயச் சொல் பின்னும் இருக்கும். உருவக அணியில் உபமேயச் சொல் முன்னும் உபமானச்சொல் பின்னும் இருக்கும். உவமையணியை விரிக்கும்பொழுது இடையே போல, ஒப்ப, அன்ன, நேர, புரைய என்னும் உவமவுருபுகள் வரும்; உருவக வணியை விரிக்கும்பொழுது இடையே ஆகிய என்னும் சொல் வரும்.

(iv) ஒரு கருத்தைப் பலவிதமாக வெளியிடுதல் : ஒரே

கருத்தைப் பலவகை வாக்கியங்களில் வெளியிடலாம். இம் மாதிரியாக எழுதுவதில் மொழிப் பயிற்சி அளிக்கலாம்.

‘ எல்லா வுயிர்கட்கும் அருள்புரியும் பெரியோர் யாண்டும் துன்புறுதல் இலர்.

இது தனி நிலை வாக்கியம். இதை,

(1) பெரியோர் எல்லா வுயிர்கட்கும் அருள் புரிவர்;

யாண்டும் துன்புறுதல் இலர்." என்று தொடர்நிலை வாக்கிய மாக்கலாம். இதையே, (2) பெரியோர் எல்லா வுயிர்கட்கும் அருள்புரிவராக

லின் யாண்டும் துன்புறுதல் இலர், !

ன்ன்று கலவை வாக்கியமாகவும் ஆக்கலாம்.