பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 387

பட்ட பொருள்களைப்பற்றி வரையச் செய்வதிலும் ஆசிரியர் எவ்வளவு முயற்சி எடுப்பினும் அதனுல் மாணுக்கர்க்குச் சிறிதும் பயன் விளையாது. மொழிப் பயிற்சிகள், கதைக் கட்டுரைகள், படக் கட்டுரைகள் போன்ற பயிற்சிகள் இந்நிலை மாணுக்கர்களுக்கு ஏற்றவை. -

மூன்ரும் நிலை : இந்நிலையில் மாணுக்கர்கள் தாமாகவே தாராளமாக எழுதும் திறனே எய்துவர். நடைமுறையில் இரண்டு மூன்று படிவங்களில் பயிலும் மாளுக்கர்கள் இத்தகைய மொழியறிவைப் பெறுவர். வரலாற்றுக் கட்டுரை, வருணனைக் கட்டுரை, விளக்கக் கட்டுரை, சிந்தனைக் கட்டுரை, கற்பனேக் கட்டுரை, தருக்கக் கட்டுரை போன்ற கட்டுரை வகைகளும், பல்வேறு கடித வகைகளும், எளிய மொழிபெயர்ப்புப் பயிற்சிகளும், பலவகையான கருத்துணர் பயிற்சிகளும் இப்படிவ மாணுக்கர்கட்கு ஏற்றவை. மேற்படிவங்களில் இவ்வகைப் பயிற்சிகளின் தரத்தை உயர்த்தி எழுதச் செய்வதுடன் ஆராய்ச்சிக் கட்டுரை, அங்கதக் கட்டுரை, புகழ்ச்சிக் கட்டுரை, நோட்டக் கட்டுரை போன்ற கட்டுரை வகைகளும் பெருக்கி எழுதுதல், சுருக்கி எழுதுதல், பொழிப்புரை வரைதல், கடினமான மொழிபெயர்ப்புக்கள், படைப்பாற்றலை வளர்க்கும் சிறுகதைகள், கவிதைகள், சிறு நாடகங்கள் போன்ற பயிற்சிகளேயும் படிப்படியாகத் தரலாம்.

மாளுக்கர் அறியவேண்டிய குறிப்புக்கள் : கட்டுரைகளே எழுதத் தொடங்குவதற்குமுன் ஆசிரியர் மாணக்கர்களைச் சில குறிப்புக்களைப்பற்றி அறியச் செய்தல் வேண்டும்.

முதலாவது: கட்டுரையின் தலைப்புக்கேற்றபடி பொருள் சேகரித்தல். பொருள் திரட்டும் வழிகள் பலவற்றுள் மூன்று மிகவும் முக்கியமானவை : () மாணுக்கர்கள் தாம் முன்னரே அறிந்துள்ள பொருள்களை நினைவுபடுத்தித் திரட்டிக்கொள்ளுதல் , (ii) பொருள்களைத் தக்க நூல்களிலிருந்தும், பொருள்களே நோக்கி ஆராய்ந்தும், வயதிலும்