பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தமிழ் பயிற்றும் முறை

அறிவிலும் மூத்த அறிஞர்களை அடுத்துக் கேட்டும் திரட்டுதல் , (iii) இருவழிகளிலும் அறியமுடியாதனவற்றை மானுக்கர்கள் தம் அறிவுநிலைக்கேற்றவாறு புறவுலகையும் அகவுலகையும் கவனித்துத் திரட்டுதல்.

இரண்டாவது : திரட்டிய பொருள்களே ஒழுங்கு. படுத்துதல், பெரும்பாலான மானுக்கர்கள் பொருள்களே வரையறுத்து ஒழுங்குபடுத்தும் வகைகளே அறியாததால்: அவர்களது கட்டுரைகள் சரியாக அமைவதில்லை. கட்டுரை அமைப்பையும் பத்தியின் அமைப்பையும் ஒட்டிக் கருத்துக் களைக் காரண காரிய முறைப்படி ஒழுங்குபடுத்திச் சட்டகம் (Skeleton) வரையும் பழக்கத்தைத் தொடக்கத்திலிருத்தே வற்புறுத்த வேண்டும். சட்டகம் அமைப்பதில் உயர்நிலப் பள்ளி மாணுக்கர்கள் பத்து மணித்துளிகட்கு (Minutes) மேலும், கல்லூரி மாணுக்கர்கள் கால்மணிக்கு மேலும் காலத்தைச் செலவிடலாகாது.

மூன்ருவது : சட்டத்தை அமைத்தானவுடன் கட்டுரை வேலையைத் தொடங்கலாம். பொருளுக்கேற்ற நடையில் அளவான வாக்கியங்களைக் கொண்டு கோவைபடத் தெளி. வாகவும், திருத்தமாகவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுரையை எழுதி முடிக்கவேண்டும். எழுதும்பொழுது கட்டுரை அமைப்புபற்றிய விதிகள், பத்தி அமைப்புப்பற்றிய குறிப்புக்கள், வாக்கிய அமைப்புப்பற்றிய கருத்துக்கள், நிறுத்தற் குறிகளிடும் முறைகள் ஆகியவற்றை நினைவி. லிருத்தி நல்ல கையெழுத்தில் நிறுத்தி எழுதி, எழுதியவற்றைத் திரும்பப் படித்தால் கட்டுரை பிழைகளின்றி நல்ல முறையில் அமையும்.

கீழ் வகுப்புக்களில் எழுத்துப் பயிற்சிக்குமுன் ஆசிரியர் மாளுக்கருடன் கலந்து பேசி நன்முறையில் தக்க வாய்மொழிப் பயிற்சியை அளிக்கவேண்டும், இங்கு இப் பயிற்சி விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கும். மேல் வகுப்புக்களில் படிப்படியாக இதன் அளவு குறைந்து கொண்டே