பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தமிழ் பயிற்றும் முறை

இதைப் பல விளுக்கள் விடுத்துப் பலரும் சேர்ந்து தொடர்ச்சி யாகக் கூறுமாறும் செய்யலாம். கதையினேக் கோவையாகக் கூறி முடித்தபின் கரும்பலகையில் குறிப்புக்களே எழுதி ஒருவாறு மாணுக்கர் உள்ளத்தில் கதையை அமையும்படி செய்வார். பின்னர் அவற்றை அழித்துவிட்டு மாளுக்கர். களே மேற்படி கதையை எழுதும்படி கூறுவார்.

இரண்டாவது படியில் கதை முழுவதையும் ஆசிரியர் கூறுவதில்லை. இன்றியமையாது வேண்டப்படும் குறிப்புக்களே மட்டிலும் சட்டகமாகக் கரும்பலகையில் எழுதிக் கதை யின் பரந்த போக்கை ஒருவாறு விளங்கும்படி சொல்லுவார். பிறகு முன்போலவே வகுப்பு மாணுக்கர்களைக் கதையினைச் சொல்லச் செய்து, பிறகு அவர்களைத் தனித் தனியாக எழுதும்படி ஏவுவார்.

மூன்ரும்படியில் கதையின் குறிப்புக்கள் தொடர்ச்சியாகவும் மிகுதியாகவும் இரா. கதையின் சுருக்கமே சிறு தொடர்மொழிகளாற் குறிக்கப்பெற்றிருக்கும். ஒவ்வொரு தொடர் மொழியையும் மாளுக்கர்கள் விரித்துக் கதையைத் தொடர்ந்து சொல்லும்படி செய்வார். பிறகு முன்போலவே, அனைவரையும் கதையைத் தனித்தனியாக எழுதும்படி ஏவுவார். புலப்படாத இடங்களில் மட்டிலும் ஆசிரியர் கூறித் துணை செய்வார்.

ஆசிரியர் கொடுக்கும் சட்டகம் நான்கு வகைப்படும். கதையை எவரும் அறிந்து கொள்ளுமாறு எல்லா விவரங். களையும் குறிப்பது நிறை சட்டகம் ; முக்கியமான நிகழ்ச்சி களை மட்டிலும் தருவது வெறுஞ் சட்டகம் ; கதையின் முற் பகுதிக்குமட்டிலும் குறிப்புக்கள் தருவது குறை சட்டகம் , கதையின் முற்பகுதியை மட்டிலும் வரைந்து விட்டுவிடுவது குறைகதை. நிறை சட்டகம் முற்றும் தெரியாக் கதைக்கும், வெறுஞ் சட்டகம் சிறிதே தெரிந்த கதைக்கும், குறை சட்டகம் அரை குறையாய்த் தெரிந்த கதைக்கும், குறை கதை கதையின் பிற்பகுதியை ஊகித்து அறியக்கூடி ,