பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 தமிழ் பயிற்றும் முறை

தீமையா? சோதிடம் பார்ப்பது நன்மையா தீமையா ? மரக்கறியூண் அருளுடைமையின் அறிகுறியா ? இன உணர்ச்சி நல்லதா ? இரப்போர்க் கீதலெல்லாம் அறமாகுமா ? என்பன போன்றவை. ஒரு பொருளே ஆராய்ந்து கூறுவது ஆராய்ச்சிக் கட்டுரையாகும். (எ-டு). அகத்தியர் வரலாறு, வள்ளுவர் சமயம், மாணிக்க வாசகர் காலம், தமிழன் பிறந்தகம் என்பன போன்றவை. ஒரு பொருளேக் கண்டித்து அல்லது பழித்துக் கூறுவது அங்கதக் கட்டுரை யாகும். அது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். வெளிப்படையாய்ப் பழிப்பது செம்பொருளங்கதம் ; மறைவாய்ப் பழிப்பது பழிகரப்பங்கதம். (எ-டு). மறுமலர்ச்சி, குடியின் பெருமை, சில கடன்காரர் செய்யும் கொடுமை, கையூட்டுவாங்கல், செல்வச் செருக்கு என்பவற்றைப்பற்றி இத்தகைய கட்டுரைகள் வரையலாம். ஒரு பொருளைப் புகழ்ந்து கூறுவது புகழ்ச்சிக் கட்டுரை யாகும். அது செம்பொருட் புகழ்ச்சி, வஞ்சகப் புகழ்ச்சி என இருவகைப்படும். வெளிப்படையாய்ப் புகழ்வது செம்பொருட் புகழ்ச்சி ; மறைவாய்ப் புகழ்வது வஞ்சகப் புகழ்ச்சி. (எ-டு.) ஆங்கிலர் பண்பாடு, திருவள்ளுவர், இளங்கோவடிகள், எருது, நாய் என்பனவற்றை இவ்வாறு வரையலாம். ஒரு பொருளின் குணங்களையும் குற்றங்களேயும் நடுநிலையாய் எடுத்துக் கூறுவது கோட்டக் கட்டுரை யாகும். (எ-டு). கம்பராமாயணம், புராணக் கல்வி, தமிழிலக்கியம், பெரியபுராணம் என்ற பொருள்பற்றி இவ்வகைக் கட்டுரைகள் வரையலாம். ஈண்டுப் பிரித்துக் காட்டப்பெற்றவை ஒன்றையொன்று தழுவாதபடி முற்றும் வேறுபட்டவையல்ல. ஒவ்வோர் இயல்பின் பெரும்பான்மைபற்றி அவை அங்ங்ணம் பிரிக்கப்பெற்றன. இன்னும் சிலர் வேறு விதமாகவும் பகுத்துக் கூறுவர்.

6. சுருக்கி வரைதல் : விரிவான ஓர் உரைநடைப் பகுதியைப் பொருள் கெடாதவாறு சுருக்கமாக எழுதுவதைச் "சுருக்கி வரைதல் என்று வழங்குவர். ஒரு பகுதியை எவ்வளவு வேண்டுமானலும் சுருக்கி எழுதலாம் ; இதற்