பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 தமிழ் பயிற்றும் முறை

கூறுவது படிப்போருக்கும் கேட்போருக்கும் எளிதில் விளங்கும்படி அமையவேண்டும். இத்தகைய நல்லியல்புகள் அமையவேண்டுமானுல், சுருக்கி வரைதலில் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றைச் சுருக்கமாக ஈண்டு தருவோம் : கொடுக்கப்பெற்றுள்ள உரைநடைப் பகுதியைப் பொருள் விளங்கும்வரை மீண்டும் மீண்டும் கருத்துன்றிப் படிக்கவேண்டும். பருப் பொருளை அறிந்தபின் நுண்பொருளை நோக்கி உணர்தல்வேண்டும். பொருள் தெரியாத ஒரு சொல்லைக்கூட விட்டுவிடாது அகராதியின் துணைக்கொண்டு பொருள் தெரியவேண்டும். பொருளே யறிந்தவுடன் அதற்கேற்ற தலைப்பைச் சுருக்கமான சொற். ருெடரால் அமைத்தல்வேண்டும். மூலப் பகுதியிலிருந்து முக்கியமான குறிப்புக்களைப் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும் ; இவற்றைத் தனித்தாளில் குறித்துக்கொள்வால் நலம் ; மூலப்பகுதியில் அடையாளமிடுதல் சரியன்று. பிறகு மூலப்பகுதியின் அளவையும் சொல்லெண்ணிக்கையையும் கவனித்து அதில் மூன்றிலொரு பங்கு அமையுமாறு சுருக்கி எழுதத் தொடங்க வேண்டும். மாணுக்கர்கள் முதன் முறையிலேயே திருத்தமாக எழுதுவது கடினமாதலின் முதலில் கரட்டு வரைவு' (Rough draft) sus origi Gisirs för@ பிறகு அதிலிருந்து செவ்வைப் படி (Fair copy) எடுத்துக்கொள்ளலாம். சுருக்கி வரையும்பொழுது சொந்த நடையில் எழுதவேண்டும் ; ஒரே தொடர்புடனும் மூலத்தை நோக்காமலேயே பொருள் முழுவதையும் தெளிவாக அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும் ; அதில் எம்முறையிலும் சொந்தக் கருத்தை ஏற்றுதலோ மூலக் கருத்தை மாற்றுதலோ கூடாது. சுருக்கி வரையும்பொழுது முக்கியமல்லாத விவரங்களையும் எடுத்துக்காட்டுக்களையும் நீக்கிவிடலாம் : கூறியது கூறலே விலக்கலாம் : நெடு வாக்கியங்களைக் குறு வாக்கியங்களாகவும், குறு வாக்கியங்களைத் தொடர்மொழிகளாகவும், தொடர்மொழிகளைச் சொற் களாகவும் சுருக்கலாம். இவற்றில் இன்னின்ன வைதாம் முக்கியம் என்று வரையறை செய்ய இயலாது ; அவை சுருக்கவேண்டிய அளவையொட்டி மாறுபடும்.