பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 12 தமிழ் பயிற்றும் முறை

இல்லை. புலவர் புகுமுகத் தேர்வில்தான் இத்தகைய பயிற்சி தரப்படுகின்றது. தாய்மொழி வளர்ச்சியில் ஊக்கம் செலுத். துவார்க்கு இத்தகைய பயிற்சிகளும் பெருந்துணையாக இருக்கும். எல்லா நிலை வகுப்புக்களிலும் இப்பயிற்சிகளைத் தர ஆசிரியர்கள் முயற்சி எடுக்கவேண்டும். பொழிப்புரை வரை வில்ை பல நன்மைகள் உண்டு. இது ஒரு செய்யுளைக் கருத்துான்றிப் படிக்கும் பழக்கத்தை மாணுக்கர்களிடம் உண்டாக்கும் ; மறைந்தும் அரிதாகவும் உள்ள பொருளே நுனித்தறியும் ஆற்றலை எய்துவிக்கும். உள்ளக் கருத்தைச் சிறந்த முறையில் நல்ல மொழியில் வெளியிடும் வாய்ப்பினை நல்கும். மாணுக்கர்கள் செய்யுட்களின் பொருளை விளக்கும் திறனேயும் இதல்ை பெறுவர்.

பொழிப்புரை நடைமாறி எழுதப்பெறல் வேண்டும். மூலத்திற் கூறப்பட்டவை அனைத்தும் பொழிப்புரையில் அமையவேண்டும். ஒரு செய்யுளே முற்றும் நோக்கி அதன் முழுப் பொருளை உணர்ந்த பிறகுதான் பொழிப்புரையை வரையவேண்டும். பொழிப்புரை மூலத்தின் துணையின்றி தன்னில் தானே நிறையுள்ளதாக இருத்தல் வேண்டும்; அது தனி இலக்கியப் பகுதியாக அமையுமாறு இருந்தால் நலம். மூலத்தையன்றி வேருென்றையும் பொழிப்புரையில் சேர்த்தல் ஆகாது. செய்யுளில் காணப்பெறும் செய்யுட்கே உரிய சொற்களையும் சொற்ருெடர்களையும் உலக நடைவடிவத்திற்கு மாற்றி எழுதவேண்டும் ; முறைமாறியிருந்தால் அவற்றை உரைநடை முறையிலும், அணி நடையிலிருந் தால் அவற்றை இயல்பான முறையிலும் மாற்றியமைக்க வேண்டும்.

பொழிப்புரை வரைவதில் இக்குறிப்புக்கள் ஒரளவு துணை செய்யும் : பொழிப்புரையை வரையும் முன் மூலப்பகுதியை ஒரு முறைக்குப் பலமுறை நன்கு படித்து பருப்பொருளேத் தெளிவாக அறிதல்வேண்டும். பருப்பொருளை அறிந்த பிறகு அப்பகுதியில் காணப்பெறும் சிறு செய்திகள், அடை மொழித் தொடர்ப்பொருள், அருஞ்சொற்பொருள், அணிப்