பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 445。

பதை உண்மையாகக் கற்பித்தலே மேற்கொள்ளும் மொழி யாசிரியர்கள் நன்கு அறிவர். கவிதையின் கருத்துக்களை யும் நயங்களேயும் மாணுக்கர்கள் உணர்ந்து துய்த்தலே கவிதைப் பாடத்தின் பயன் என்பதை உணராமலேயே கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பெறுதல் பொறுப்பற்ற செயலாகும். இவற்றைக் கற்பிக்கும் காலமும் அதற்குச் செலவிடப்பெறும் பொருளும் விழலுக்கிறைத்த நீர்போலாகும். -

தொடக்க நிலை : இளஞ்சிருர்களுக்கு விளங்காதனவும் அவர்கள் துய்த்து உணர்ந்திராதனவும் அவர்கள் பட்டறி. விற் கப்பாற்பட்டனவுமான கருத்துக்களும், நிகழ்ச்சிகளும், காட்சிகளும் அவர்களுக்குச் சுவையளிக்க மாட்டா. எனவே, கீழ் வகுப்பு மாணுக்கர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் பாடல்கள் அவர்கள் மனநிலைக் குகந்தனவாய் இருத்தல் வேண்டும். உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் எளியஇனிய சொற்கள், உயிர்ததும்பும் சந்தநயம், சொற்கள் திரும்பத் திரும்ப வந்து ஒலிக்கக்கூடிய பின்வரு நிலையழகு, கருத்துப் பொருளின்றி காட்சிப் பொருள்களின் வருணனை ஆகியவற்றைக்கொண்டு மிளிரும் பாடல்கள் சிறுவர்களின் செவிக்கு இன்ப அமிழ்தம் ஊட்டும் ; சிந்தைக்கும் சிறந்த விருந்தாக அமையும். இளஞ்சிருர்களின் மனம் நன்கு விரிந்து இருக்க முடியாது; பரந்த உலகிலுள்ள பல பொருள்களே அறியும் ஆற்றல் அவர்களிடம் தோன்றும் பருவம் இன்னும் வாய்க்க வில்லை. அவர்கள் வாழ்க்கையில் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியக் கூடிய பொருள்களே மட்டிலும்தான் அவர்கள் தெளிவுபெற எளிதில் உணரக்கூடும். எனவே, அவர்கள் வாழ்க்கையில் எளிதில் குறுக்கிடக்கூடிய செடிகொடிகள், மரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள், உற்ருர் உறவினர்கள், நண்பர்கள், ஞாயிறு, திங்கள், விண் மீன்கள் போன்றவற்றைத்தான் அவர்கள் கருத முடியும்; உணரக்கூடும். ஆதலால் அவர்களின் விளையாட்டுத்தன். மைக்கும் மனப்பான்மைக்கும் ஏற்ற பல வித இனிய பாடல்களைச் சேர்க்கவேண்டும். அவர்கள் ஆர்வத்துடன் கற்கக்கூடிய இன்னிசையும் எளிமையுமுள்ள பாப்பாப் பாடல்கள்,