பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 463

வினுக்களிலும் கவிதை இருக்க முடியாது ; அவற்றிற்கு மாணுக்கர் கூறும் விடைகளில் ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பெற்றவைகளிலும் இருக்க முடியாது. ஒரு சில எளிய சொற்கள் பெருகிய-ஆளுல் பொருளாழம் இல்லாத-செய்யுட்களே வேண்டுமானுல் இம்முறையில் கற்பிக்கலாம். அல்லி அரசாணிமாலை, பவளக்கொடிமாலை, நல்லதங்காள் கதை, புலந்திரன் களவு போன்ற நூல்களிலுள்ள பகுதிகளுக்கு இம்முறை பொருந்தக்கூடும். இம் முறையைக் கையாளும் ஆசிரியர் மிகத் திறமையாளராக இருத்தல் வேண்டும் ; வினக்களே மிகத்திறனுடன் ஆக்கித் தொகுக்கவேண்டும் ; இம்முறையில் கற்பிக்கப்பெறும் பாடம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கவர்ச்சிகரமாகத் தோன்றும். சில சமயம் ஆசிரியர் இம்முறையைக் கையாளுவதில் தவறு இல்லை ஆல்ை அதைக் கவிதை கீற்பித்தல்” என்ற பெயரால் வழங்கக் கூடாது ; அவ்வளவுதான் ! முகவுரையே தேவையிராத பகுதிகளே இம்மாதிரி கற்பிக்கலாம். ஆளுல் கற்பிக்கும் பகுதிகளுக்கு அதை முகவுரையாகத்தான் கொள்ளவேண்டும்! இவ்வாறு சில விளுக்களே விடுத்து விடைகளே வருவித்தாலும், மாணுக்கர்கள் கவிதையை அறிந்து கொண்டதாகக் கருதமுடியாது. கவிதை என்பது வரிவடிவு மட்டுமன்று; அஃது ஒலி வடிவாயமைந்ததொரு சொல்லோவியம். மாணுக்கர் அதை இசையுடன் படிக்கக் கேட்காதவரை, கேட்டு அதன் இசையின்பத்திலும் அழகுணர்ச்சியிலும் திளேக்காதவரை, அவர்கள் கவிதையைக் காணவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். மேற்கூறியவாறு பலவேறு விளுக்களே விடுத்து மாணுக்கர். களிடமிருந்து ஆசிரியர் கவிதையை வருவிக்க எடுக்கும் முயற்சி ஆசிரியருடைய திறனைக் காட்டுவதாக முடியுமே யன்றி சொல்லோவியத்தை மாணுக்கர்கட்குக் காட்டுவதாக இராது. கலையுருவாம் கவிதையை மாளுக்கர்கள் காணுதவரை, அவர்கள் எவ்வாறு கவிதையின் முருகுணர்ச்சியில் ஈடுபடமுடியும்? அதில் திளேக்க முடியும்?

ஓர் அழகிய ஓவியத்திலுள்ள பல கோடுகளையும் தனித்தனியாக ஒருவர் கண்டு மகிழலாம் ; அவை யாவும்