பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 467

யாக இருந்தால் அதைக் கருத்துமுடிவு கொண்ட சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு கற்பித்தல் வேண்டும்.

பாடல்களுக்குச் சொற்பொருள், பொழிப்புரை, கருத்துரை இலக்கணக் குறிப்புக்கள், தொடைநயம், அணிநயம் முதலியவற்றை நன்கு எடுத்துக்கூறி விளக்குவதால் மாணுக் கர்கள் பாடல்களின் பொருளை நன்கு உள்ளத்தில் அமைப். பர் ; தேர்விலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவர். ஆளுல், பாடல்களின் பொருளே மட்டிலும் அறிதல் ஒருசார் நோக்கமேயாகும். இதைவிடப் பாடல்களின் நயத்தையும் அழகையும் உணர்ந்து சுவைத்து மகிழ்தலே சிறந்த நோக்க மாகும். கவிதைகளைக் கவிஞன் எந்த உணர்ச்சியுடன் பாடிஞனே அவ்வுணர்ச்சி கவிதைகளைக் கற்போரிடத்தும் உண்டாக வேண்டும் ; அப்பொழுதுதான் அவர்கள் கவிதை இன்பத்தில் திளேக்கமுடியும். இதற்கு ஆசிரியர் என்ன செய்யவேண்டும்? கவிஞனின் உணர்ச்சியை முதலில் தாம் பெற்று, பிறகு மானக்கர்கட்கு வழங்கவேண் டும். சொற்சுவையும் பொருட்சுவையும் தொடை நயமும் அணிநயமும் இடத்திற்கேற்ற சந்த இனிமையும் கொண்டு விளங்கும் பாடல்களில் மானுக்கர்களைத் திளேக்கவைத்தலே தமிழாசிரியர்களின் முதற்கடமையும் முதலாய கடமையுமாகும். கவிதைகளின் கவினே, உணர்ச்சியை, அறியச்செய்யாது பாடல்களைப் பயிற்றுவதால் பயனென்று மில்லே. தொடக்க நிலையில் கற்ற பாடல்களையே உயர் நிலையிலும் கற்பிக்கவேண்டிய முறையில் கற்பித்தால் கட்டாயம் புதிய பொருள்கள் துலங்கும் , மாணுக்கர்கள் சுவைப்பதிலும் குறைவு இராது. கவிதைகளைக் கற்பிப்பதெப்படி என்பதை ஒரு சில எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு ೧೩67 ಹಿಡಿಎTಹಿ| -

எடுத்துக்காட்டு-1

1. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்

பதுமமுக மலர்ந்தாரைப் பார்மின் ! பார்மின் !!