பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 25

ஒவ்வொருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவ ருடைய அறிவே காரணமாகும். அறிவுடையார் எல்லாம் உடையர்ர் என்ற வள்ளுவர் வாக்கை அறிக. ஆறறி வுடைய மக்களிடம் இயல்பாக அமைந்த அறிவு செயற்கை முறையால் வளர்ச்சி யடைகின்றது : ஒருவருடைய பட்டறி வாலும் பிறர் பட்டறிந்தவற்றைக் கேட்பதாலும் அவற்றைப் பற்றிய நூல்களைப் படிப்பதாலும் வளர்வதையே செயற்கை முறையால் வளர்வது என்று சொல்லவேண்டும். ஆழ்ந்து சில நூல்களைப் படித்து அறிவை வளர்க்கும் வாய்ப்புக்கள் இக்காலத்தில் அதிகமாக உள்ளன ; கல்வி பன்முக விரிவை எய்தி யிருக்கின்ற்து. எனவே, பின்னர் உயிர்க்கு உறுதி பயப்பதற்கு மட்டிலும் நோக்கமாகக் கொண்ட பண்டைக் காலத்து தாய்மொழிப் படிப்பைப் போலன்றி இக்காலத் தாய்மொழிப் படிப்பு, மக்களின் பழக்க வழக்கங்கள், உடல் நலம், பொருள் நிலை, அறிவியல்கள் முதலிய பல துறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்திருக்கின்றது. இக்காலத் தேவைகளையொட்டி கண்ணேயும் கருத்தையும் கவரும் எல்லாக் கலைகளையும் கற்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற இயல்பான உணர்ச்சி மாணுக்கர்களிடம் ஏற்படக்கூடும். தாய் மொழியில் உள்ள புத்தகங்களை மேம்போக்காகப் படிக்கும் பழக்கத்தாலேயே இஃது எளிதில் நிறைவேறும். எனவே, இக்காலத்தின் அறிவுத்துறைக்கு ஏற்றவாறு சொற் செல்வமும் நடைப் பொருத்தமும் உடைய தமிழ் மொழியை வளர்க்கும் முறையில் தமிழ்க் கற்பித்தல் அமையவேண்டும். இலக்கிய நடையும் இலக்கியக் கருத்துக்களே உணர்த்தும் தமிழும் பிற பாடக் கருத்துக்களே உணர்த்துவதற்கு ஏற்றதாக இரர். தேவைக் கேற்றவாறு புது நடையையும் புதிய கலைச் சொற்களையும் ஆக்கச் சொற்களையும் மேற் கொள்ள வேண்டியிருக்கும். தாய்மொழியாசிரியர்கள் இந்நோக்கத்தையும் நன்கு அறிய வேண்டியது இன்றி யமையாதது.

தமிழ்மொழி பயிற்று மொழியாக வந்த பிறகு பள்ளியில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடைபெறு