பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் பயிற்றும் முறை

கின்றன. இவ்விடத்தில் ஜார்ஜ சாம்சன் என்பார் ஆங்கில மொழிக்குக் கூறியுள்ளது தமிழுக்கும் பொருந்தும். அவர் கூறுகின்ருர் : “ தாய்மொழி பள்ளி வாழ்க்கைக்க்ே இன்றி யமையாதது. அவ்வாழ்க்கையிலிருந்து அதைப் பிரிக்க இயலாது ; அது பள்ளியாகிய உடலுக்கு உயிராக இருப்பது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் அது தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் புறக்கணிக்க முடியாத ஒரு நிலையைப் பெற்றிருப்பது. அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு கருவியாக இருப்பது மட்டுமன்றிக் குழந்தையை வாழ்க் கையில் ஈடுபடுத்தும் இன்றியமையாத உறுப்பாகவும் இருக் கின்றது.” எனவே, தமிழ்மொழிப் பயிற்சி எல்லாப் பாடங்களுக்கும் அடிப்படையான பொதுப் பயிற்சி என்றும், தமிழ்மொழி, கல்வித் திட்டத்தில் (Curriculum) காணப்பெறும் ஏனேய பாடங்களைப் போல் ஒரு பாடம் மட்டிலும் அன்று என்றும், அஃது அங்கு இங்கு எதைபடி எங்கும் பிரகாசமாய் ’ப் பள்ளி வாழ்க்கையின் சூழ்நிலையிலெல்லாம் ஊடுருவிச் செல்லும் சாதனம் என்றும் தமிழாசிரியர் மட்டுமன்றி எல்லா ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் அரசினரும் உணர்தல் வேண்டும். உணர்ந்து, விரைவில் குறைகளைக் களைந்து ஆக்கவேலைக் குரிய அனைத்தையும் நிறைவேற்றத் துணியவேண்டும்.

தாய்மொழி ஆசிரியர்கள் : இன்று உயர்நிலைப்பள்ளி களில் பணியாற்றிவரும் தாய்மொழியாசிரியர்களில் பெரும்பாலோர் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் ; பெரும்பாலோர் பள்ளியிறுதித் தேர்வுவரை கூடப் பொதுக் கல்வி பெருதவர்கள். ஏனேய பாடங்களாகிய கணிதம், சமூக இயல், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஆசிரி யர்களேப்போல் இவர்களும் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். அவர்களைப்போல இவர்களும் பயிற்சிக்

    • George Sampson : English for the English (Cambridge University Press)
  • இந்நிலை இன்று விரைவாக மாறிக்கொண்டு வரு ன்றது.