பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 தமிழ் பயிற்றும் முறை

மேனுட்டு மொழிகளில் இத்தகைய இலக்கிய வகைகள் வளர்ந்துள்ளவாறு தமிழ் மொழியிலும் வளர்ந்து இலக்கியக் கருவூலத்தை வளமுடையதாக்க வேண்டும். சிறுவர்களின் மனப் பசியையும் பாமரமக்களின் அறிவுப் பசியையும் மறுமலர்ச்சி இலக்கியங்கள்தாம் நிவர்த்தி செய்யமுடியும், நல்ல முறையில் இவை யமைத்தால் மொழி வளர்ச்சியும் செம்மையாக ஏற்படும். கல்விக்கூடங்களில் பணியாற்றும் மொழியாசிரியர்கள் இவ்வுண்மையை அறிந்து அதற்கேற்றவாறு கற்பிக்கும் வழிவகைகளே வகுத்துக் கொள்ள. வேண்டும் ; காலத்திற்கேற்ற புதுமுறைகளைக் கையாண்டு மானுக்கர்களிடம் மொழியார்வத்தை ஊட்டி மொழியறிவை வளர்க்க வேண்டும்.

உரைநடையின் பொதுப் போக்கு : “ இனி உரைநடையின் போக்கையும் மரபையும் அன்றுமுதல் இன்றுவரை கருதி உரைநடையினே ஒருவாறு வெள்ளே நடை, கொடும். புணர் நடை, மணிப்பவள நடை, செந்தமிழ் நடை, கொடுந்தமிழ் நடை, கொச்சை நடை, செய்யுள் நடை. இலக்கிய நடை, தருக்க நடை, கலப்பு நடை என்பன போன்று பிரித்துக் காட்டலாம். எல்லோருக்கும் எளிதாய்ப் பொருள் விளங்குவது வெள்ளே நடை. எல்லாச் சொற். களேயும் எளிதிற் பொருள் விளங்க வேண்டிப் புணர்ச்சி பிரித்தெழுதாது புணர்த்தெழுதுவது கொடும்புணர் நடை. வட சொற்களையும் தென் சொற்களையும் மணியும் பவளமும் கலந்து கோப்பதுபோல் சரிக்குச்சரி கலந்தெழுதுவது மணிப்பவள நடை . இயன்றவரை அயல் மொழிக் கலப். பின்றித் தனித் தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதுவது செந்தமிழ் நடை. திசைச் சொற்கள் மிக விரவுமாறு கலந்து எழுவது கொடுந்தமிழ் நடை. கற்றறிவில்லா இழிமக்கள் பேசுவது கொச்சை நடை. செய்யுள் மனங்கமழுமாறு: திரிசொற்கள் விரவப் பொருள் அரிதுனருமாறு அமைப்பது செய்யுள் நடை. கற்ருேர்க்கு மட்டும் பொருள் விளங்குமாறு மற்ருேர்க்கு எளிதில் விளங்காதவாறு உயர்ந்த சொற்களும் வடிவங்களும் அமைய எழுதுவது இலக்கிய நடையாம் .