பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 தமிழ் பயிற்றும் முறை

கர்களிடம் கருத்து வளம், சொல் வளம் முதலியன உறுதி பெறவேண்டும். ஒரு பகுதியைப் படித்து அதன் பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறவேண்டும் ; அதைக் காரண காரியத் தொடர்புணர்ந்து வகுத்துப் பார்க்கும் திறமையைப் பெறவேண்டும். பிறபாடங்களும் தாய்மொழியில் கற்பிக்கப் பெறுவதால் அதற்கு வேண்டிய அறிவையும் தமிழ் உரைநடைச் செல்வம் நல்க வேண்டும். நடைமுறையில் வழங்கும் மொழியிலும் இலக்கியத்தில் பயின்றுவரும் மொழியிலும் காணக்கூடிய அருஞ்சொற்கள், சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், அரிய சொல்லாட்சிகள், இலக்கண வழக்காறுகள் முதலியவற்றின் பொருளை யுணர்ந்து அவற்றை ஏற்ற இடங்களில் தம் வாக்கில் வைத்து வழங்கக்கூடிய பயிற்சிகளைப் பெற்ருல் மாணுக்கர்களின் மொழி வளம் பெருகும். மக்கள் ஆட்சியும் ஆராய்ச்சித் துறையும் பெருகிவரும் இக்காலத்தில் உரைநடையின் நடைமுறைப் பயன் அளவற்றது. அதனே எய்து வித்தற்குரிய நோக்கத்துடன் உரைநடைப் பாடம் நடத்தப்பெறுதல் வேண்டும்.'

பயிற்று முறை : பாடத்தைத் தொடங்குவதற்கு முன்னரே கற்பிக்க வேண்டிய பாடத்தின் பொருள்பற்றி ஏற்கெனவே அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்துள்ள பல செய்திகளைப்பற்றிப் பேசியும், துணைக் கருவிகளேக் காட்டியும் மாளுக்கர்களுடைய மனத்தைப் புதுப்பொருளேக் கற்கும் நிலைக்குப் பக்குவப்படுத்த வேண்டும். முன்னரே நடந்த பாடப்பகுதியைக் கற்கப்போகும் பாடப்பகுதியுடன் ஏற்ற முறையில் பொருத்தலாம். சில வினுக்களைக் கொண்டு மாணுக்கர் வாயிலிருந்தே சில செய்திகளே வருவித்து இதைச் செய்விக்கலாம். பாடத்தை நடத்தும்பொழுது எளிய பகுதிகளே மாணுக்கர்களே வாய்விட்டுப் படிக்கச் செய்து, அவர்கள் படிக்குங்கால் நேரிடும் * கண்ளுேட்டப் படிப்பையும் கையாளலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கண்ளுேட்டமாகப் படிக்கச் செய்து பின்னர் விளுக்களை