பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 489

உச்சரிப்புப் பிழை, நிறுத்தப் பிழைகள் முதலியவற்றைத் திருத்தலாம். மானுக்கர்கள் படிக்கும்பொழுது செய்யும் பிழைகளே அவ்வப்பொழுது திருத்தம் செய்யாது பகுதியைப் படித்து முடிந்தபின் திருத்துதல் நன்று. பிறகு ஆசிரியரும் அப்பகுதியை ஒருமுறை தெளிவாகப் படித்துக் காட்டி ஆங்காங்கு காணும் அருஞ்சொற்களை விளைவிக்கலாம். பாடத்தின் பொருளை உணர்ந்தனரா என்பதைச் சில வினுக்களே இடையிடையே விடுத்து அவர் கூறும் விடை களினல் அறிந்து கொள்ளலாம்.

உரைநடைப் பாடத்தில் வரும் அருஞ்சொற்கள், சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், இணைமொழிகள், மொழிநயங்கள், இலக்கணச் சிறப்புக்கள் முதலியவற்றை விளக்கலாம். அவை வருங்கால் நேருக்குநேர் பொருள் கூறுவதுடன் நில்லாது அவற்றை ஏற்ற இடங்களில் தம் வாக்கிலேயே வைத்து வழங்கும் பயிற்சிகளைத் தருதல்வேண்டும். இன்னும் ஆசிரியர் விளக்கங்கள், மேற். கோள்கள், எடுத்துக்காட்டுக்கள், ஒத்த நிகழ்ச்சிகள், பிறகாட்சிகள் முதலியவற்றைக் காட்டும்பொழுது அவற்றை மாளுக்கர்கள் மன க்காட்சிகளாகக் காணச் செய்து பாடத்தைச் சுவையுள்ளதாக ஆக்கலாம் ; உயிருள்ளதாகவும் செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்ங்ணம் நடத்திய பிறகு அப்பகுதியில் தொடர்பாகவும் காரண காரியமுறை வழுவாதும் பல வினுக்களே விடுத்துத் தேறலாம். விடைகளாக வருவனவற்றைச் சுருக்கிக் கரும்பலகையில் எழுதி அப்பகுதியின் பிண்டப்பொருளைக் காட்டலாம்; அதையும் மேற் கூறிய அருஞ் சொற்கள் முதலியவற்றையும் தம் குறிப்புப் விடுத்து கருத்தறி சோதனையை நடத்தலாம். பகுதியின் திரண்ட கருத்தைக் கூறச் செய்யலாம். மாளுக்கர்கள் வாய்க்குட் படிக்கும்பொழுது மனத்தில் எழும் ஐயங்களை ஆசிரியரைக் கேட்டு அகற்றிக் கொள்ள வேண்டும்.