உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் பயிற்றும் முறை 4982ء۔

திராவிட மொழியினத்தைச் சேர்ந்தது. திராவிட இனத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. அவற்றுள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலேயாளம், துளுவம், குடகு என். லும் ஆறுமொழிகளும் திருந்தியவை, முதல் ஐந்துமே மிகச் சிறந்தவை. துதம், கோதம், கோண்டு, கந்தம், இராஜமஹால், ஒராவோன் ஆகிய ஆறு மொழிகளும் திருத்தா

தவை.

- மக்களுக்குப் பிறப்பு இறப்பு உள்ளன போல் மொழி.

களுக்கும் பிறப்பு இறப்பு உள்ளன என்று ஒ:ாற்ரும் கூறுதல் கூடும்; மொழி வரலாற்றில் இதை விரிவாகக் காணலாம். மாந்தரால் இடையீடின்றி வழங்கப்பட்டு வரும் மொழி வழக்கு மொழி (Spoken language) என்றும், அவ்வாறின்றி வழக்கிழந்த மொழி வழக்கிறந்த மொழி (Lea language) என்றும் வழங்கப்பெறும். தமிழ், தெலுங்கு, காட்டியம், இந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகள் வழக்கு மொழிகள்; வடமொழி, இலத்தீன், ஈப்ரு முதலியன வழக்கித்த மொழிகள்.

ஒருவருடைய கருத்தினை அவர் பேசும் சொற்களால் பிறர் அறிந்து கொள்ளுதல்போல, அவர் எழுதும் எழுத் துக்களாலும் அறிந்து கொள்ளுதல் கூடும். ஆதலின், மொழி இரண்டு வகைப்படும். ஒன்று, பேச்சு மொழி; மற்றென்று எழுத்து மொழி. நாம் பேசும்பொழுது நமது கருத்தினச் சொற்களாலும் சைகையின் துணையாலும் விளக்குகின்ருேம். அதனுல் முன்னின்று கேட்பவர் நமது கருத்தினே நன்கு அறிந்து கொள்ளுகின்றனர். எழுத்து மூலமாக நமது கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கும்பொழுது பிழையின்றி எழுதாதவிடத்து அதனே நாம் கருதியவாறே அவர்கள் அறிந்து கொள்ளுதல் அருமையாகும் ; வேறு வகையாகக் கருத்துக் கொள்ளுதலும் கூடும் : அவ்வாறின்றி நமது கருத்தினே நாம் கருதியவாறே அவர்கள் அறிந்து கொள்ளு தற்பொருட்டு நாம் எழுதும்பொழுது பிழையின்றித் தெளிவாக எழுதுதல் வேண்டும். அங்ங்ணம் எழுதுதற்கு வேண்டிய விதிகளைக் கூறுவதே இலக்கணம் ஆகும்.