பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 தமிழ் பயிற்றும் முறை

இலக்கணத்துடன் சேர்த்து வழங்குவதும் உண்டு. மேற். கூறிய ஐந்து இலக்கணங்களேயும் உடைய நூல்கள் தொல் காப்பியம், அவிநயம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னுரல், முத்து வீரியம் என்பன. தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர்; அகத்தியரின் மானுக்கர் பன்னிருவரில் ஒருவர் ; தொல்காப்பியக் குடியிற் பிறந்தவர். அவிநயம்’ என்பது தொல்காப்பியத்திற்குக் காலத்தில் முற்பட்டது என்பதை நன்னூலுக்குரிய மயிலைநாதருரையால் அறிகின்ருேம்; அவிநயம் இப்பொழுது கிடைக்கவில்லை. ‘வீரசோழியம்’ என்பது பெளத்த சமயத்தாராகிய புத்தமித். திரரால் இயற்றப்பெற்றது; அதன் உரையாசிரியர் பெருக் தேவனுர் என்பவர். இலக்கண விளக்கம் என்பது திரு. வாரூர் வைத்தியநாத தேசிகர் என்னும் சைவப் பெரியார் ஒருவரால் இயற்றப்பெற்றது. அதற்கு விரிவான உரையொன் றுண்டு. அந்நூல் குட்டித் தொல்காப்பியம்’ என்றும் வழங்கப்படும். தொன்னுரல்" என்பது வீரமாமுனிவரால் இயற்றப்பெற்றது. அதில் ஐந்திலக்கணத்தைத் தவிர வேறு சில விசேடப் பகுதிகளும் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன. * முத்துவீரியம்’ என்ற இலக்கண நூல் சென்ற நூற்குண்டில் உறையூரிலிருந்த விசு வகுல திலகராகிய முத்துவீர வாத்தியார் என்பவரால் இயற்றப்பெற்றது. அதற்கு உரை செய்தவர் திருநெல்வேலியைச் சார்ந்த வண்ணுரப்பேட்டையில் இருந் தவரான திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்பவர்.

ஐந்திலக்கணங்களையும்பற்றி ஓரளவு அறிந்தால்தான் தமிழ் இலக்கியங்களே நன்கு கற்றுச் சுவைக்க முடியும். எனவே, மொழியாசிரியர்கள் இன்று பயின்று வரும் தொகாப்பியம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இறையணுரகப் பொருள், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், வெண்பாப் பாட்டியல் போன்ற ஏதாவது ஒரு பாட்டியல் நூல் ஆகியவைபற்றி ஓரளவு தெரிந்திருக்கவேண்டும் அந்நூல். களில் கூறப்பெற்றுள்ள ஒரு சில அடிப்படையானவற்றை. யாவது அறிந்திருத்தல் மிகமிக இன்றியமையாதது.