பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம். 総508

நெடில், வினு, சுட்டு எழுத்துக்கள் ஆகிய எழுத்து வகை களேயும்;தன்மை முன்னிலே படர்க்கைப் பெயர்களையும்; உயர் திணை, அஃறிணை வகைகளேயும்; ஆண்பால், பெண்பால்,பலர் பால், பலவின்பால் வகைகளையும்; இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய கால வகைகளே யும்; எழுவாய், பயனிலை செயப்படுபொருள் வகைகளையும் ஒரளவு மானுக்கர்கட்கு பாடப்புத்தகங்களைக் கற்பிக்கும்பொழுது கற்பிக்க முயற்சி செய்யலாம். இவற்றைப்பற்றி ஒரு சிறிதளவு மாணுக்கர்கள் தெரிந்துகொண்டால் போதுமானது; வற்புறுத்திக் கற்பிக்கத் தேவையில்லை. ஐந்தாம் வகுப்பில் நான்காம் வகுப்பில் கற்பிக்கப் பெற்றவை தக்க பயிற்சிகளால் வலியுறுத்தப் பெறும். அன்றியும், முற்றுச் சொற்ருெடர், எச்சச் சொற்ருெடர் வகைகளையும், வேற்றுமையைப்பற்றிய அடிப்படைக் கருத்துகளையும், பெயரெச்சம் வினையெச்ச்ங்களேயும், உடன்பாட்டு எதிர்மறைப் பொருள்களையும், உடன்பாட் டிலும் எதிர்மறையிலும் வரும் வினு, கட்டளே, உணர்ச்சி, செய்தி, தனிநிலை, கலவை, தொடர்நிலை முதலிய வாக்கிய வகைகளையும், இவ்வகுப்பு மாணுக்கர் பட்டறிவில் கானநேரிடும். நெருப்புருண்டை, கருத்துடையவர், நன்னெறி, ஆங்காங்கு, தற்காப்பு போன்ற சொற்ருெடர்களைப் பிரித்தறியவும், பால்-குடம், பூ--சோலே, மாடு + பொங்கல் கிழக்கு-திசை, கருமை-முகில், உத்தர+ அயனம் முதலிய சொற்களை முறைப்படிப் சேர்த்தறியவும் கற்பிக்கலாம்.

பயிற்று முறைகள் : முதல் ஐந்து வகுப்புக்களில் மேற். கூறியவற்றைக் கற்பிக்கும்பொழுது விளையாட்டு முறை: களேக் கையாண்டால் நிறைந்த பயனைக் காணலாம். ஐந்தாம் வகுப்பில் விதிவருவித்தல் முறையை (inductive method) மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்களாகக் கையாளும் சொற்ருெடர்கள் மாணுக்கர்களின் பட்டறிவின் ஒட்டியிருத்தல் வேண்டும். கற்பிக்கும்பொழுது தகுந்த விளக்கப் படங்களே யும் கருத்துப் படங்களேயும் (Diagrams and charts) பயன்படுத்தினுல் கற்பிக்கும் பொருள்கள் மாணுக்கரின் உள்ளத்தில் தெளிவாக அமையும். இத்தகைய