பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 தமிழ் பயிற்றும் முறை

யானேயிலண்டம், ஆட்டுப் புழுக்கை, எருமைச் சாணம், என்ற வழக்காறுகளேயும் அவர்கள் அறியவேண்டும். பிராணிகளின் ஒலிகளுக்குரியனவாக இவற்றைக்கொள்ள. லாம்: எருமை கணக்கிறது; பசு கதறுகிறது; குதிரை கனேக் கிறது; கழுதை கத்துகிறது; நாய் குரைக்கிறது: யானே பிளிறுகிறது; சிங்கம் கர்ச்சிக்கிறது ; பன்றி உறுமுகிறது; நரி ஊளையிடுகிறது; கோழி, குயில், கூவுகிறது; மயில் அகவு. கிறது; காக்கை கரைகிறது. ஜ் மரபுச் சொற்கள் தொடர் மொழிகள் முதலியவற்றைக் கற்பித்தல்: இவைகளைக் கற்பிக்கும்பொழுது விதிவருவித்தல் முறை, விதி விளக்கு முறை, இரண்டும் கலந்த முறை ஆகியவற்றைக் கையாள வேண்டும். அவற்றைச் சொந்த வாக்கியங்களில் வைத்துக் கூறும் பயிற்சிகளே அதிகமாக நல்க வேண்டும். அவை யாவும் மாணுக்கர்களின் பட்டறிவை யொட்டி இருக்க வேண்டும். அவற்றைத் தனித் தனியாகக் கற்பிப்பதை விட, தொகுத்தும் வகுத்தும் கற்பித்தால் அவை நன்கு மனத்தில் பதியும். அவற்றை இவ்வாறு வகைப்படுத்திக் காட்டலாம்:

(1) வழக்கியல் வகை: இயல்பு வழக்கு, தகுதி வழக்கு. இலக்கண முடையது, இலக்கணப் போலி, மரூஉ ஆகிய மூன்றையும் இயல்பு வழக்கிலும், இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி ஆகிய மூன்றையும் தகுதி வழக்கிலும் அடக்கிக் காட்டலாம். இவற்றைத் தவிர, திசை வழக்கு, இழிவழக்கு, அயல் வழக்கு ஆகியவற்றையும் ஒரோ வழி எடுத்துக்காட்டி ஏற்கத்தக்கனவற்றை வலியுறுத்திக் கற்பிக்கலாம்.

(2) பெயர்ச் சொற்கள் : இப்பகுதியிலுள்ளவற்றை பண்புப்பெயர்பற்றியவை, மரபுப்பெயர்பற்றியவை என். றெல்லாம் பாகுபாடு செய்து காட்டலாம்.

(8) வினைச் சொற்கள் : இவற்றின் அடியாகப் பிறக்கும் சொற்களே இசைக் கருவி வினைகள், உண்டி வினைகள், மழை வினைகள், சினே வினைகள் என்று வகைப் படுத்தி விளக்கலாம்.