பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

态8含 தமிழ் பயிற்றும் முறை

முதலியவற்றை உரை நடை கவிதை வகுப்புக்களில் அவை வருங்கால் பொருத்தி விளக்கிக் காட்டவேண்டும். அஃதுடன் நின்று விடாமல் பாடப்புத்தகங்களில் இவை. வழங்குகின்ற இடங்களே யொத்த, தமக்குத் தெரிந்த, பிற, இடங்களிலும் இவற்றை வைத்து வழங்கும் பயிற்சிகளையும் மாணுக்கர்களுக்குத் தரவேண்டும். இங்ங்னம் இலக். கணத்தை மொழிப்பாடத்தோடு பொருத்திக் காட்டலாம், இதற்கு ஆசிரியர் ஆழ்ந்த சித்தனேயுடன் பாட ஆயத்தம் செய்யவேண்டும்.

மொழிப் பயிற்சி வகுப்புக்களிலும் வாய்மொழிப் பயிற்சி, கட்டுரை வகுப்புக்களிலும் இலக்கணத்தின் பயனே மாணுக்கர் அறியுமாறு செய்தல் ஆசிரியரின் கடமையாகும். இதற்கேற்ற பயிற்சிகளைச் சிந்தித்துத் தயார் செய்ய வேண்டும். இலக்கணப்பாடங்களில் அறிந்த இலக்கண அமைதிகள், குறியீடுகள் முதலியவற்றை வாய் மொழியில் ஏற்ற இடங்களில் வைத்து வழங்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். பாடப்புத்தகங்களில் அவை ஆங்காங்கு வரும் பொழுது தக்க இடங்களில் வைத்து வாய் மொழிப் பயிற்சி அளித்தபின் அவற்றைத் தமது குறிப்பேடுகளில் (Note books) எழுதி வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்த வேண்டும். இவற்றைக் கட்டுரை எழுதும்பொழுது எழுத்திலும் வழங்க வாய்ப்புக்களேத் தரலாம். கட்டுரை எழுதும் பொழுது இலக்கண அறிவை நேராக வற்புறுத்தாமல் மறை முகமாகவே அனுபவத்தில் கைவரச் செய்யலாம். ஒரு கட்டுரை, அதன் பத்தியாகிய சொற்ருெடர்களின் ஒருமைப்பாடு, தொடர்ச்சி, அழுத்தம், வேறுபாடு முதலிய வற்றையும் சொற்களின் வைப்பு முறை, ஏற்ற சொற்களை எடுத்து வழங்கல் முதலியவைகளேயும்பற்றிய விதிகளோடு பொருத்திக்காட்டலாம். அஃதாவது, அவ் விதிகளே அவர்கள் சொல்லளவுடன் நில்லாது நடை முறையிலும் தங்கள் எழுத்து வேலையில் மேற்கொள்வார்களாயின், கட்டுரையும் இலக்கணமும் சிறந்த முறையில் பொருத்தப்பட்டன என்று கூறிவிடலாம். இம் முறை இலக்கண அறிவு உறுதிப்பட மிகவும் இன்றியமையாதது.