பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆசிரியரின் வேலைத் திட்டங்கள்

எந்த வேலையாக இருந்தாலும் திட்டம் போட்டு செய்தால் அது சிறந்த முறையில் நடைபெறும். தாய் மொழியாசிரியர்களும் தாம் செய்யும் வேலயைக் குறித்து விரிவான திட்டம் வகுத்துக்கொள்ளவேண்டும். பள்ளி வாழ்க்கை முழுவதிலும் மானுக்கர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மொழிப்பகுதி, இலக்கியப்பகுதி ஆகியவைபற்றி மொழியாசிரியர்கள் முன்னதாகவே சிந்தித்து அவற்றை ஒழுங்காக முறைப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். அம்மாதிரியாக விரிவான திட்டம் ஒன்று இல்லாவிட்டால் அனுபவம் இல்லாத ஆசிரியர்கள்--ஏன் ? ாேல்லோருமேசில பாடங்களை மெதுவாகவும் சிலவற்றை வேகமாகவும் நடத்தித் தொல்லையுறுவர். திட்டம் ஒன்று வகுத்துக் கொண்டால், வழியறிந்து நீடக்கும் வழிப்போக்கன் போலவும், திசையறிந்து கலம் செலுத்தும் மீகாமன் போலவும் ஆசிரியரும் போக்கறிந்து கால உணர்ச்சியுடன் ஒரே வேகத்தில் பாடங்களே நடத்திச் செல்ல இயலும்,

திட்டமிடுதலின் இன்றியமையாமை : ஒரு புகை வண்டிப் பாதையை அமைக்கும் பொறி இயல் வல்லுநர் பாதை செல்லவேண்டிய நிலப்பகுதிகளைப்பற்றிப் பருந்து நோக்காகப் பொதுவாக அறிந்து கொண்ட பின்னர்தான் தன் வேலையைத் துவக்குகின்ருர். பாதை அமைக்க வேண்டிய நிலப்பகுதிகளை முதலில் ஆராய்கின்ருர். வழியிலுள்ள குன்றுகள், மலைகள், சமவெளிகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், பீட பூமிகள், கணவாய்கள், சரிவுகள், ஏற்றங்கள், நகரங்கள் போன்றவைகளைப்பற்றி ஒரளவு தெரிந்து கொண்டால்தான் தான் செய்ய வேண்டிய வேலையைப். பற்றி ஒரு திட்டம் ஆயத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, மேற்கூறிய கூறுகளனைத்தையும்