பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 545

யுணர்ந்து அதைச் செவ்வையாக வழங்குவர் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

உயர்நிலைத் தொடக்கப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்திட்டம் : (6, 7, 8-வது வகுப்புக்கள்): இவ் வகுப்புக்களில் மேற்கூறிய நோக்கங்கள் உறுதியடைவதுடன் பேராசிரியர்கள் இயற்றியுள்ள காவியப் பகுதிகளைப் படித்துச் சுவை யுணரும் ஆற்றலும் அவைகளில் பற்றும் வளர்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பெறும். இவ் வகுப்புக்களில் மாளுக்கர்களின் படிப்பில் பெரும்பாலும் வாய்க்குட் படித்த லாகவே அமையும் ; கருத்துனரும் திறன் குறையாமலேயே படித்தலின் வேகத்தை அதிகப்படுத்துதல் நோக்கமாக இருக்கும். இப்படிச் செய்வதால் எல்லாப் பாடங்களிலும் செலவிடும் நேரம் மீதிப்படும். அந்நேரத்தைப் பொழுது போக்கிற்காகவும் வாய்க்குட் படித்தலே மேற்கொள்ளவும் பயன்படுத்தச் செய்யலாம்; இதற்குப் பள்ளி நூலகத்தைப் (அப்படி ஒன்றிருந்தால்) பயன்படுத்தலாம். இவ்வகுப்புக்களில் தொடர்கதை நூல்கள், துணைப்பாட நூல்கள், எளிய நாடகங்கள், சிறுகட்டுரைகள், பிரயாண வரலாறு நூல்கள், பலதிறப்பட்ட கடிதங்கள் ஆகியவற்றைப் படிக்கப் பழகுதல் வற்புறுக்தப்பெறும். அடிப்படையான இலக்கண விதிகளே அறிதல், மேற்கோள் நூல்களிலும் தகவல் நூல்களிலும் பொருள்களைத் தேடியடைதல், அகராதி, அட்டவணைகளைப் புரட்டிப் பழகுதல் ஆகியவற். றிலும் பயிற்சி கொடுக்கவேண்டும்.

நடுநிலைப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்திட்டம் (1, 2, 3 படிவங்கள்) : 1948-இல் அரசினரால் வெளியிடப்பெற். றுள்ள அத்திட்டம் வருங்கால அடிப்படைப் பள்ளிகளிலிருந்து வெளிவரும் மாணுக்கர்களின் மொழியறிவை யொட்டித் தயார் செய்யப்பெற்றுள்ளது. சாதாரணமாக அம் மாணுக்கர்களின் மொழியறிவு தொடக்கநிலைப் பள்ளிஆளில் ஐந்து வகுப்புக்கள் பயின்று வெளியேறும் மானுக்கர். களின் மொழியறிவைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பெறுகின்றது. மூன்ரும் படிவத் தேர்ச்சி

த-36