பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 தமிழ் பயிற்றும் முறை

பெற மாளுக்கர்கள் தங்கள் பட்டறிவை யொட்டியுள்ள பொருள்களைப்பற்றி எழுத்துப் பிழை, இலக்கண வழு ஆகியவை யின்றிப் பேசவும் எழுதவுமான நிலையிஜன எய்துவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அன்றியும், அவர்கள் கருத்துக்களே வெளியிடும் திறமையுடன் தாமா. கவே மேற்படிப்புக்குச் செல்லும் அளவுக்கு அறிவையும் பெறுவர் எனக் கருதவும் பெறுகின்றது. -

இதுகாறும். இருந்ததற்கு மாருக மாளுக்கர்களுக்கு உற்சாகத்தையும் விருப்பத்தையும் ஊட்டும் பல்வேறு பொருள்களைப்பற்றித் தெரிந்துகொள்ளவும், பாடப்புத்தகம் எழுதுவோர் பல பொருள்களைத் தேர்ந்தெடுத்து எழுதவும் அத்திட்டம் வாய்ப்பளிக்கின்றது. வானெலிப் பேச்சுக். களிலிருந்து பல உரைநடைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மாணுக்கர்களின் நிலைக்கேற்றவாறு மாற்றியும், முதல் மூன்று படிவ மானக்கர்களின் மொழியறிவுக் கேற்றவாறு பல நூல்களிலிருந்து செய்யுட்களைத் தொகுத் தும் அவற்றிலிருந்து மொழிப் பயிற்சிகளே அளிக்கவும் அத்திட்டத்தில் யோசனைகூம்ப் பெற்றுள்ளது. தேர்ந் தெடுக்கப்பெறும் பாடங்கள் அன்ருட வாழ்க்கையினை யொட்டியும் அவற்றில் கூறப்பெறும் நீதிகள் வெளிப்படை யாக இல்லாமல் குறிப்பாக இருக்குமாறும் அமையவேண்டும். காலத்தில் செய்தல், தயக்கமின்றிச் செய்தல், மரியாதை, பிறர் மனம் நோகாதவாறு செயலாற்றல், உதவி புரிதல், வாழ்விலும் தாழ்விலும் ஒத்த மனநிலையுடனிருத்தல் ஆகிய பண்புகள் பாடங்களில் மிளிரலாம். கதைகளிலோ வருணனைகளிலோ வரும் கதைமாந்தர் ஒரு சாதியின. ரையோ சமயத்தினரையோ இகழ்வதாக இருத்தல்கூடாது. புத்தகப்படிப்பு மட்டிலும் உண்மைக் கல்வியாகாது என்பதையும், எது உண்மைக் கல்வி என்பதையும் பாடங்கள் உணர்த்துமாறு அமைதல் நலம். இதிகாசங்களிலிருந்தும் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பெறும் வீரத்தைப்பற்றிய செய்திகள் ஒரு குறிப்பிட்ட மொழியின. ரைப்பற்றியே இருத்தல் கூடாது என்று திட்டம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.