பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 每4了

சரியாகவும் இலக்கண வழுக்களின்றியும் எழுதுவதுடன் தெளிவாகவும் இனிமையாகவும் எழுதுதல் இன்றியமையாதது என்பதை மாணுக்கர்களிடம் வற்புறுத்துமாறு பாடங்கள் அமையவேண்டும். பாடங்களில் கையாளப்பெறும் மொழி தெளிவாகவும், நேராகவும், பொருளுக் கேற்றதாகவும் எழுதப்பெறல் வேண்டும். அதே சமயத்தில் அவர்களுடைய அன்ருட வாழ்வுக்குரிய சொற் களஞ்சி யத்தைப் பெருக்குவதாகவும் இருக்கவேண்டும். ஒரு சொல்லையோ சொற்ருெடரையோ பல பொருள்களில் வழங்கும் பயிற்சிகள், அகராதியை அடிக்கடிப் பயன்படுத்தும் பயிற்சிகள், தேவையான அளவு இருத்தல் வேண்டும். மிகைப்படக்கூறல், தெளிவின்மையுடனிருத்தல் போன்றவைகளைத் தரும் சொற்களைத் தவிர்க்க வேண்டும். இவ் வகுப்புக்களுக்குத் துணேங்பாடங்கள் தேவையில்லை. ஆசிரியர்கள் நூலகத்திலுள்ள புத் தகங்களேத் தேர்ந்தெடுத்து மாணுக்கர்களிடம் அப்புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும். பாடப்புத்தகங்களிலுள்ள உரைநடைப் பாடங்கள் ஒரே ஆசிரியரால் எழுதப்பெற்றிருந்தால் நன்று. நூலகத்தில் படிக்கும் புத்தகங்களிலிருந்து பலருடைய உரைநடைகளைப் படிக்கலாம் என்று திட்டம் குறிப்பிடுகின்றது. உரைநடையில் பாதிப்பகுதி நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, இலக்கியத்தைப்பற்றியும் கலையைப்பற்றியும் இருக்கவேண்டும். எடுத் துக்காட்டாக, புலவர்கள், சிற்பிகள், கலைஞர்கள், இலக்கியம் கலை ஆகியவற்றை ஆதரிப்போரின் வரலாறுகள், சில இலக்கியங்கள் தோன்றி வெளியிடப்பெற்ற நிகழ்ச்சிகள் பெயர்பெற்ற சில கவிதை இலக்கியங்களில் சில பகுதிகளின் உரைநடை ஆக்கம் ஆகியவை இனிய, எளிய சுவையூட்ட டும் நடையில் இருக்கலாம். அப் பாடங்கள் அழகுணர்ச்சி ததும்பும் படங்களால் விளக்கம் செய்யப்பெற்ருல் நன்ருக இருக்கும்.

ஒவ்வொரு படிவத்திலும் கவிதைப் பகுதிகளும் உரை. நடைப் பகுதிகளும் இருக்கவேண்டிய அளவுகளைப்பற்றியும் பாடத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். 1, 2, 8-ஆம்