பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 தமிழ் பயிற்றும் முறை

இனி, தமிழாசிரியர்கள் அமைத்துக் கொள்ளவேண். டிய வேலைத் திட்டங்களை ஒரு சிறிது ஆராய்வோம்.

தமிழாசிரியர் அமைத்துக் கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் : தமிழாசிரியர்கள் தம் பணியைத் திறம்பட நிறைவேற்ற வேண்டுமாயின் தாம் ஆற்றவேண்டிய பணி. யைப்பற்றி நான்கு விதமாகக் கருத்தினேச் செலுத்த வேண்டும். (1) கல்வித் திட்டங்களில் தாய்மொழியின் நிலை, வகுப்புக்களுக்கென அரசினர் வகுத்துள்ள மொழிப்பாடத் திட்டங்கள் ஆகியவைபற்றிய ஆராய்ச்சி ; (ii) ஓராண்டிற்கென வுள்ள பாடத் திட்டங்களை ஆண்டின் பருவங்களுக்கெனப் (Terms) பிரித்தமைத்தல் , (iii) பாடப் பகுதிகளை உளவியற்படியோ காரண காரிய முறைப் படியோ வேறு முறைப்படியோ பிரித்தமைத்தல் , (ii) இவ்வாறு பிரித்தமைத்த பகுதிகளை மீண்டும் சிறுசிறு பாடம் பகுதிகளாகவும், முறைக்கேற்ற அளவுகளாகவும் அமைத்தல் ஆகிய துறைகளில் தமிழாசிரியர்கள் கருத்தினைச் செலுத்துதல் வேண்டும். இவை ஒவ்வொன்றையும் பற்றி ஈண்டு ஒரு சிறிது கவனிப்போம்.

(i) பாடத்திட்ட ஆராய்ச்சி : ஒவ்வொரு தாய்மொழி யாசிரியரும் அவர் எப் பள்ளியில் பணியாற்றிவரினும் தொடக்கநிலைக் கல்வித் திட்டம், உயர்நிலைக் கல்வித்திட்டம், பல்கலைக் கழகக் கல்வித் திட்டம் ஆகியவற்றைப் பற்றிப் பொதுவாக அறிந்திருப்பதுடன் அவற்றில் தாய் மொழியின் இடத்தைப்பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும்; தாய்மொழிக்கு வாரத்தில் எத்தனே மணி ஒதுக்கப்பெற்றுள்ளது என்பதைப்பற்றியும் தெளிவாக அறிந்திருத்தல் இன்றியமையாதது. இவ்வாறே தான் பணியாற்றும் வகுப்புக்குரிய பாடத்திட்டத்தைப்பற்றியும் மிக நன்ருகத் தெரிந்திருத்தல் வேண்டும் ; தான் கற்பிக்கும் வகுப்புக்கு மேலும் கீழும் உள்ள வகுப்புக்களுக்குரிய பாடத்திட்டங்களைப்பற்றியும் ஓரளவு நன்கு அறிந்திருத்தல் இன்றியமையாதது. ஒரு பள்ளியிலுள்ள தமிழாசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் ஓராண்டில் கற்பிக்க