பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 55製

வேண்டிய கவிதைப் பகுதிகள், உரைநடைப் பகுதிகள், இலக்கணப் பகுதிகள், மொழிப் பயிற்சிகள், கட்டுரைப் பயிற்சிகள், படைப்பாற்றல் பயிற்சிகள் போன்றவற்றைத் தெளிவாக ஆராய்ந்து ஒவ்வொரு துறையிலும் செய்யவேண்டிய அளவைப்பற்றியும் கற்பிக்கவேண்டிய பொது முறைகளைப்பற்றியும் ஒரு திட்டமான முடிவுக்கு வரவேண்டும். பலர் கூடி ஆராய்ந்தால் தெளிவான முடிவினேக் <5 sı 6&FSUtrib.

t) ஆண்டின் பருவங்களுக்குரிய பகுதிகள் பற்றிய ஆராய்ச்சி : ஒர் ஆண்டிற்குரிய பாடங்களைப் பள்ளி வேலை நாட்களே அனுசரித்துப் பாகுபாடு செய்தல் தவறு. கடினமான பகுதிகள், எளிய பகுதிகள், நடித்துக் காட்டற்குரிய பகுதிகள், செயல்திட்ட முறைக்கு ஒத்து ஓவரக்கூடிய பகுதிகள் ஆகியவற்றின் தன்மைகளே மனத்திற்கொண்டு அவற்றிற் கேற்றவாறு ஒரு பருவத்திற்கு இவ்வளவு பாடம் முடிக்கவேண்டும் என்று பிரிவினை செய்துகொள்ளல் வேண் டும். அவ்வாறு செய்யும்பெழுது மாணுக்கர் சுவையினேயும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரைநடைப் பகுதியில் இத்தனை வரிகள், கவிதைப் பகுதியில் இத்தனைப் பாட்டுக்கள் என்று மட்டிலும் அளவிடுதல் சரியன்று.

மாளுக்கர்கள் படிக்க வேண்டிய பிற பாடங்களும் உள்ளன ; அவற்றையும் இவ்வாறுதான் பாகுபாடு செய்து திட்டத்தில் அமைக்கவேண்டும். இதையும் தமிழாசிரியர்கள் உணரவேண்டும். தமிழாசிரியர்கள் உணர்வது போலவே பிற ஆசிரியர்களும் தமிழ்ப் பாடத்தைப்பற்றிய முழு விவரங்களையும் அறிதல்வேண்டும். அப்படி அறிந்திருந்தால்தான் திட்டமிடுதலில் அனேவரும் நன்கு கருத்தினேச் செலுத்த முடியும்.

(iii) பாடங்களை முறைப்படுத்துவதுபற்றிய ஆராய்ச்சி : கற்பிக்கவேண்டிய பகுதிகளை எம்முறைகளில் அமைக்கலாம் என்பதைப்பற்றியும் தமிழாசிரியர்கள் முன்னரே ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருதல் நன்று. பாடப்புத்தகங்