பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 தமிழ் பயிற்றும் முறை

7. பாட முடிவு : மீண்டும் பாடலே ஒரு முறை படித்து இவ் விளுக்களை விடுக்கலாம்.

(i) குறமகளிரின் தொழில்கள் யாவை ? (ii) அவர்கள் பருகும் பானங்களைக் கூறு. (iii) அவர்கள் எவற்றை உடுப்பர்? (iw) அவர்கள் எவ்வாறு விருந்தோம்புவர்? (w) அவர்கள் எதன்மீது உறங்குவர்?

(wi) அவர்களுடைய இறைவழிபாடு எவ்வாறு கூறப் பட்டுள்ளது ?

பாடலின் கருத்தை மாளுக்கர் கூறுவதிலிருந்து சுருக்கமாகக் கரும்பலகையில் எழுதி மாளுக்கர்களைத் தம் குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளச் செய்தல். மாணுக்கர் விரும்பிக் கேட்டால், குமரகுருபரர் வரலாறு, “குறம்’ என்ற பிரபந்தத்தின் இலக்கணம் ஆகியவற்றைக் கூறுதல்.

இறுதியாக ஒருமுறை பாடலே இசையேற்றிப் பாடி மாணுக்கர்களைக் கவிதைச் சுவையின் கொடுமுடிக்குக் கொண்டுசெலுத்துதல்.

11. உரை நடை

  • இந் நிலவுலகிற் காணப்படும் உயிர்ப் பொருள் உயிரில் பொருள் என்னும் இரண்டில் உயிர்ப் பொருளுக்குப் பயன்படுதற் பொருட்டாகவே உயிரில் பொருள்கள் அமைக் கப்பட்டிருத்தல் நன்கு புலனுகின்றது. ஆகவே, இவ்வுலக அமைப்பும் இதன் இயக்கமும் எல்லா உயிர்களின் பொருட் டாகவே நடைபெறுகின்றன என்பது எவரும் மறுக்கலாகாத உண்மையாகும். இத்துணேச் சிறந்த உயிர்கள் இவ்வுலக அமைப்பிற் புகுந்து சிறிது காலம் காணப்படுதலும், அதன் பின் அவை காணப்படாது மறைதலும் என்னே யென்று துணுகி யாராயுங்கால், இவ்வுலகுக்கு வரும் பொழுது அறிவும் இன்பமும் இலவாய்த் தோன்றும் அவ் வுயிர்கள்.