பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழ் பயிற்றும் முறை

யாசிரியர்களுக்கும் முதன்முதலாக வழங்கிய பெருமை இவரைச் சாரும்.

தமிழும் பிறபாட ஆசிரியர்களும் : இன்று ஆங்கிலத்தைத் தவிர உயர்நிலைப் பள்ளிகளின் கல்வித் திட்டத்திலுள்ள பாடங்கள் யாவும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பெறு கின்றன. இந்நிலையில் தமிழை ஒரு தனிப்பாடம் என்று கருதுதல் தவறு. பிறபாடங்களேக் கற்பிக்கும்பொழுதும் சரியான மொழியைக் கையாள வேண்டும் : அப்பாடங் களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மொழியுணர்ச்சியுடன் தம் விழுமிய பணியை ஆற்றவேண்டும். ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தபொழுது எங்ங்னம் எல்லா ஆசிரியர்களும் அவ்வப்போது மாணுக்கர்கள் ஆங்கில மொழியில் செய்யும் பிழைகளைக் களைந்தனரோ, அது போலவே இன்று எல்லா ஆசிரியர்களும் தமிழ்மொழியில் மாணுக்கர் செய்யும் பிழைகளைக் களைய முயலவேண்டும். சுருங்கக் கூறினுல் எல்லா ஆசிரியர்களும் பாட ஆசிரியர். களாக இருப்பதுடன் மொழியாசிரியர்களாகவும் பணியாற்றவேண்டும். மாணுக்கர் வழங்கும் தாய்மொழியில் காணும் பிழைகளுக்கு தமிழாசிரியர் மட்டிலும் பொறுப்பாளிகள் ஆகார் ; பிறபாட ஆசிரியர்களும் ஒரளவு பொறுப்பாளிகளாக இருக்கத்தான் வேண்டும். இந்திஜல ஏற்படவேண்டுமானல் பட்டதாரிகள் தமிழைக் கற்பிக்கும் நிலை வரவேண்டும். பிறபாட ஆசிரியர்கட்கு ஒரு வகுப்பிற்காவது தாய்மொழியைக் கற்பிக்கும் வாய்ப்பினே நல்க வேண்டும்; அவர்களே அதற்குத் தகுதியாளர்களாகவும் ஆக்கவேண்டும்.

உடனடியாகச் செய்யப்பெற வேண்டியவை: தமிழ். மொழி வளர்ச்சி கருதிச் சில சீர்திருத்தங்கள் உடனடியாகச் செய்யப் பெறல் வேண்டும். கல்லூரித் தமிழ்ப் பாடத். திட்டங்களே மாற்றியமைத்துப் பட்டதாரிகளிடம் நல்ல தமிழறிவு ஏற்படும் வழிவகைகளை வகுக்கவேண்டும். தாய்மொழி பயிலாது பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர்களாகப்பணியேற்க வரும்பொழுது அவர்களே அப்பட்டத்திற்.