பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 35

குரிய தமிழ்த் தேர்வில் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்ற கட்டாய விதி செய்யவேண்டும். இயன்றவரை, பட்டத் தேர்வுவரை தமிழ் பயிலாதவர்களைத் தமிழில் பிறபாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்க ை கப் பணியாற்றும் பொறுப்புக்களைக் குறைத்தல் வேண்டும். பி. ஏ. வரையிலாவது தமிழ் பயிலாதவர்கள் பிறபாடங்களைத் தமிழில் கற்பித்தல் பொருத்தமன்று ; பி. எஸ்.சி. பட்டம் பெற்றவர்கள்: வித்துவான்தொடக்கநிலைத் தேர்வு வரையிலாவது தமிழ் பயின்ருல்தான் நல்ல தமிழ்மொழி அறிவைப்பெற முடியும். உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களாகப் பணியாற்று வோர் தாய்மொழிப் பற்றுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். தாமும் கொஞ்சம் தமிழ் பயின்று தமிழில் அறிவு பெருதவரை தமிழ்மொழியின்மீது எங்ங்னம் ஆர்வங் காட்டமுடியும் ? எனவே, தலைமையாசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள் ஏனேய திறமைகளுடன் தமிழ் மொழிப் புலமையும் ஓரளவு பெற்றிருக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டாதவரை பள்ளிகளில் நல்ல தமிழை எதிர்பார்க்க முடியாது. இன்று பி. டி. வகுப்பில் தமிழ் கற்பித்தலை விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்றவர்கட்குத் தமிழா சிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பின் நல்கவேண்டும். பி.டி. தேர்வில் தமிழ்க் கற்பித்தல் விருப்பப் பாடமாக இருப்பதை நீக்கிக் கட்டாய பாடமாகச் செய்யவேண்டும். தாய் மொழியில் நல்ல அறிவு பெருதவரை, தாய்மொழியில் பிற பாடங்களைத் திறமையாகக் கற்பித்தல் இயலாது. தாய் மொழியில் பிற பாடங்களேக் கற்பிப்பவர்கள் தாய்மொழியை.

  • இன்று புதிதாக அமைக்கப்பெற்றுள்ள பி. எஸ்.சி. பாடத் திட்டத்தில் மொழிப்பாடம் தக்க இடத்தைப் பெற் றுள்ளது.

+ புதிய பி. டி. பாடத்திட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மொழியில் பயிற்சி பெறவேண்டும் என்ற விதி

செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.