பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 தமிழ் பயிற்றும் முறை

IV. மொழிப் பயிற்சிகள்

1. வகுப்பு : 3-ஆம் படிவம். 2. பாடம்: நேர் கூற்றை நேரல்கூற்ருக மாற்றுதல். 3. காலம் : 45 மணித்துளிகள். 4. நோக்கம் : நேர்கூற்றை நேரல்கூற்ருக மாற்றுவதில் சில உரைநடை மரபுகளை மாணுக்கர்கள் அறியச் செய்தல்.

5. ஊக்குவித்தல் : (i) அரிச்சந்திரன், "என் உயிர் போயினும் யான்

உண்மையே உரைப்பேன்’ என்று கூறிஞன். (ii) அரிச்சந்திரன் தன் உயிர் போயினும் தான்

'உண்மையே உரைப்பதாகக் கூறிஞன். இந்த இரண்டு வாக்கியங்களைக் கரும்பலகையில் எழுதிக் காட்டி ஒரு கருத்தை இரண்டு விதமாக உரைக்கலாம் என்று கூறுதல். மாணுக்கர்களிடம் சில விளுக்களை விடுத்து நேர் கூற்று, நேரல்கூற்று என்பதை வருவித்தல். ஆங்கிலத்திலும் அவற்றிற்குச் சரியான Direct speech, Indirect speech என்ற சொற்ருெடர்களேயும் வருவித்தல். நேர்கூற்றை நேரல்கூற்ருக மாற்றுவதில் சில விதிகளே அறியப்போவதாகக் கூறுதல்.

6. பாடவளர்ச்சி :

(க) தன்மைப்பெயர் முதலியவற்றில் மாறுபாடு

(i) தன்மைப் பெயர் : -

(அ) நேர் : நான், “ நான் பரிசு பெற்றேன். ”

என்றேன்.

நேரல் : நான் பரிசு பெற்றதாக நான்

கூறினேன். (ஆ) நேர் : நீ, கான் பரிசுபெற்றேன். '

என்ருய்.

நேரல் : நீ பரிசு பெற்றதாக நீ கூறினுய்.