பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 தமிழ் பயிற்றும் முறை

நேரல் : தந்தையார் மாதவன் பள்ளிக்குப் போகவேண்டியதாக அவனிடம் கூறினர்.

(இந்த எடுத்துக்காட்டுக்களில் நேர் கூற்றில் உள்ள துணைநிலை வாக்கியத்தில் காணப்படும் முன்னிலே இடப்பெயரை அச் செய்தி கூறப்படும் பொருளின் இடப்பெயராக நேரல்கூற்றில் மாற்றியமைத்திருப்பதைக் காணச்செய்தல். ஒருமை பன்மைப் பால்களுக்கு ஏற்றவாறு தவறு படாமல் அமைத்தலே வற்புறுத்தல். நேர்கூற்றில் முதன்மை வாக்கியத்தில் காணப்படும் படர்க்கைப் பெயர்கள் நேரல் கூற்றிலும் மாருமல் இருக்கும் என்பதை அறியச் செய்தல்)

(2) வினைச்சொல்லின் காலத்தில் மாறுபாடு :

(அ) நேர் : கந்தன், நான் படித்துக்கொண்டிருந்தேன்" என்று கூறினுன்.

நேரல் : கந்தன் தான் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறிஞன்.

(ஆ) நேர் : கந்தன், “நான் படித்துக்கொண்டிருக் கின்றேன்” என்று கூறுகின்ருன்.

நேரல் : கந்தன் தான் படித்துக்கொண் டிருக்கின்றதாகக் கூறுகின்ருன்.

(இ) நேர் : கந்தன், "நான் படித்துக்கொண்டிருப்பேன்’ என்று கூறுவான்.

நேரல் : கந்தன் தான் படித்துக்கொண்டிருப்பதாகக் கூறுவான்.

(இந்த எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு துனே நிலை வாக்கியத்தின் வினை முற்றுச்சொல் எக்காலத்தைச் சார்ந்ததோ அதே காலத்திலேயே முதன்மைவாக்கியத்தில் உள்ள வினைச்சொற்களே நேரல்கூற்றில் மாற்றியமைக்க வேண்டும் என்பதை வருவித்தல்.)

ஆயினும், தமிழ் மொழியில் படித்துக்கொண்டிருப்பதாக என்பதையே முதலிரண்டு நேரல்கூற்று எடுத்துக்காட்டுக்