பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芯93 தமிழ் பயிற்றும் முறை

g:L–th (Place of action), 61rihésoâ5ğ ğiğğl6’uth (Philoso phy of life) ஆகியவையே இவ்வுறுப்புக்களாகும். இவை அனைத்தும் ஒரு புதினத்தில் ஒரே அளவாகவோ, அனைத்துமோ இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. அவை அனைத்தும் இருக்கலாம் ; ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் வரலாம். இவற்றின் விரிவை மேனுட்டுத் திறனய்வு நூல்களில் விரிவாகக் காணலாம். ஹட்சன் எழுதிய இலக்கிய ஆராய்ச்சி நூலில் இச்செய்திகளைக் கண்டுகொள்க. ே

தமிழ்நாட்டு வாழ்க்கையைப்பற்றிய சிறந்த புதினங்கள் இன்னும் அதிகமாகத் தோன்றவில்லை. ஆணுல், ஒருசில எழுத்தாளர்கள் தமிழ் மொழிக்கு நல்ல புதினங்களைத் தந்திருக்கின்றனர். வங்காளம், குசராத்தி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளிலிருந்து பல புதினங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளன. மூல நூல்கள் யாவும் நல்ல இலக்கியப் பண்புகளுடனும், சுவையுடனும், கதை வளத்துடனும் இலங்குவதைப்போலவே மொழிபெயர்ப்பு நூல்களும் நல்ல முறையில் ஆக்கப்பெற்றுள்ளன.

மேல் நாட்டில் புதினங்கள் ஒரு சிறந்த இலக்கிய நிலைக்கு உயர்ந்திருப்பதுபோல நம் நாட்டில் உயரவில்லை; காரணம், அவர்கள் மொழியில் கருத்தைச் செலுத்தியிருப்பதுபோல நம்மவர்கள் செலுத்தவில்லை. தாமஸ் ஹார்டி, கேனன்டாயில், எச். ஜி. வெல்ஸ் போன்ற புதின ஆசிரியர்கள் தாம் எழுதும்பொழுது வழுக்களற்துநடையை மேற்கொள். ளுகின்றனர். ஆகவே, அவை பல்க்லேக் கழக மாளுக்கர்களுக்குப் பாடமாக அமையும் பெருமையையும் பெற்றுள் - என. நம் நாட்டுப் புதின ஆசிரியர்களும் தாம் எழுதும் மொழியில் கருத்தைச் செலுத்திப் பலவித வழுக்களை நீக்கி எழுதினுல் அவையும் சிறந்த நிலைக்கு உயரும். நல்ல முறையில் அமைந்த ஒரு சில புதினங்கள் (எ-டு. டாக்டர் மு. வ. எழுதியவை) தமிழில் இல்லாமல் இல்லை. அவற்றைத்

  • Hudson, W. H. An Introduction to the study Literature.