பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 599

தேர்ந்தெடுத்து மாணுக்கர்களைப் படிக்கும்படியாக ஆசிரியர் துாண்டலாம்.

சிறு கதைகள் : சிறு கதை ஒரு தனிப்பட்ட இலக்கிய வகை. சிறு கதைகள் எல்லாம் ஒவியங்கள். அவைகளைப் படைப்பதற்குக் கலைத்திறன் வேண்டும். அவற்றைப் படிப்போரின் உணர்ச்சி உச்சநிலைக்குப் போகவும் கூடும்; சிலசமயம் அவை கவிதைப் பான்மைக்கும் உயரலாம். அன்படி உயர்வது மேகத்தின் நடுவில் மின் வெட்டுத் தோன்றுவதுபோலிருக்கும். நீண்ட வருணனைகள், பெரிய கதை மாந்தர் முதலியவற்றிற்குச் சிறு கதையில் இடம் இல்லை. அடக்கத்துடன் அமைக்கப்பெற்ற ஒரு சில சொற் ருெடர்கள் உணர்ச்சியின் அனலைக்காட்டும்.

ஆங்கில எழுத்தாளரான ராபர்ட் லூயி ஸ்டிவென்சன் என்பார் சிறு கதை எழுத்தாளர்களுக்கு ஒரு யோசனை கூறுகின்ருர் : ‘'எனக்குத் தெரிந்தவரையிலும் சிறு கதை எழுதுவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒரு நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய கதை மாந்தர்களைப் படைக் கலாம் ; அல்லது ஒரு கதை மாந்தரைத் தேர்ந்தெடுத்து அதன் மீது நிகழ்ச்சிகளைப் பொருத்தலாம் ; அல்லது ஒரு சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளையும் கதை மாந்தர்களேயும் தேர்ந்து அமைக்கலாம்.” இவர் கூறும் யோசனை புதிய சிறு கதை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதற்கு ஐயமில்லை.

தமிழ் நாட்டில் சிறு கதை வளர்ச்சிக்கு முதன் முதலில் வழிகாட்டியவர் காலஞ்சென்ற வ. வெ. சு. அய்யர் அவர்கள். அவரைப் பின்பற்றி ஏராளமான சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றி எண்ணற்ற சிறுகதைச் செல்வங்களைத் தமிழுக்கு அளித்துள்ளனர். இவற்றுள் பல தழுவல்களாகவும் மொழி பெயர்ப்பாகவும் பிறந்தவை. புதுமைப்பித்தன்”, கு.ப. இராஜ கோபாலன் போன்ற ஒரு சில சிறு கதை எழுத்தாளர்கள் சாவா இலக்கியத்தன்மையை பெற்றுள்ள சில சிறு கதைச்