பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 OO தமிழ் பயிற்றும் முறை

செல்வங்களை இயற்றியுள்ளனர். புதினக் கலையைவிடச் சிறு கதைக் கலே தமிழில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

கட்டுரைகள் : கட்டுரை (Essay) என்பது ஒரு பொருளைப் பற்றிப் பல கருத்துக்களை இசைத்துக் கோவைபட வரையும் சொற்பெருக்கு என்பதாகும். மறைமலையடிகள் இதைக் கோப்புரை” என்று குறிப்பிடுவர். இதுவும் மேனுட்டு இலக்கிய வகைகளில் ஒன்ருகும். உரைநடை நன்ருக வளராத தமிழ் மொழியில் கட்டுரை இலக்கியங்கள் மேனுட்டு மொழிகளில் காணப்படுபவைபோல் அவ்வளவு அதிகமாக இல்லை. இன்று தோன்றியுள்ள ஒரு சில கட்டு. ரைகளும் எல்லோரும் படிக்கும் நிலையில் அமையவில்லை ; அறிஞர்களும் புலவர்களும் படிக்கத் தக்கவாறுதான் அவை அமைந்துள்ளன.

ஆங்கில மொழியில் எவரும் படித்துச் சுவைக்கக்கூடிய முறையில் ஏராளமான கட்டுரை இலக்கியங்கள் தோன்றி. யுள்ளன. பல்வேறு பொருள்பற்றிய கட்டுரைகளே அங்கு ஏராளமாகக் காணலாம். ஆங்கிலக் கல்வி பெற்ற ஒரு சில தமிழறிஞர்கள் ஆங்கில மரபை யொட்டி ஒரு சில கட்டுரை. களே வரைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக மகிழ்நன்' எழுதியுள்ள பல கட்டுரைகளைக் குறிப்பிடலாம். கடலும் கடலையும் அரஞ்செய விரும்பு யதார்த்தவாதி லோக விரோதி மங்கை பங்கன் வண்ணுரப் பெரியாண்டி’ போன்ற கட்டுரைகள் படிக்கப் படிக்க இன்பஞ் சுரப்பவை ; படிப்பவர் வாயில் தேனுற்றைத் தரும் பான்மையுடையவை; இலக்கிய மணமும் நகைச்சுவையும் ததும்பி நிற்பவை. "கல்கி', எஸ். வி. வி., காடோடி’, வ. ரா., தி. ஜ. ர., கி. வ. ஜகந் நாதன் போன்ற மறுமலர்ச்சி எழுத்தாளர்களும் பல நல்ல கட்டுரைகளைத் தோற்றுவித்துள்ளனர். அவர்கள் அடிபற்றி இன்று எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்தவண்ண மிருக்கின்றன.

  • இவை மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற தொகுப்பில் காணப்படுபவை.