பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 6 1 1

அமர்ந்து படிப்பதற்கேற்ற இருக்கை வசதிகள் நன்ருக அமைக்கப்பெறல் வேண்டும். இரண்டாவதாக வேண்டப் படுபவை நல்ல நூல்கள், பருவ வெளியீடுகள், ஆராய்ச்சி இதழ்கள் முதலியவை. இவற்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு சிறிய குழு ஏற்று நடத்தில்ை நன்று : குழுவில் பணியாற்றுவோர் படிப்பதில் ஆர்வமுள்ளவர்க:ளாகவும், நாளிதழ்களில் வெளிவரும் மதிப்புரைகளைக் கவனிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். மூன்ருவதாக, நூல்களே மாணுக்கர் கைக்குக் கிட்டும்படி செய்யும் முறை நன்கு அமைதல்வேண்டும். நூலக முறை.களில் நன்கு தேர்ச்சிபெற்ற ஒருவர் பார்வையில் நூலகம் அமைந்து நூலகமுறைகளைப்பற்றிச் சிறிது பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் கூட்டுறவால் இதை நன்ருக அமைக்கலாம். வகுப்பு நூலகத்தில் இருக்கவேண்டிய நூல்கள்: வகுப்பு நூலகங்களுக்கு மாணுக்கர்களின் இயல்ழையும் சுவையை. யும் திறனையும் அறிந்து அவற்றிற்கேற்ற, படிப்பில் ஆர்வம் ஊட்டவல்ல நூல் வகைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மனத்திற்குக் கவர்ச்சிதரும் நிகழ்ச்சிகளும் கருத்தை ஈர்க்கும் செயல்களும் நிறைந்த சிறுகதை நூல்கள், புதினங்கள் ஆகிய வற்றைத் தேர்ந்தெடுக்கலாம். வழிச்செலவுகள் (Travels) பற்றிய நூல்கள், புதிய நாடுகளேக் கண்டுபிடித்த வரலாற்று நூல்கள் அவர்களின் சிந்தைக்கு விருந்தாக இருக்கும். அறிவியல் துறைகளில் புதியது புனேந்த வரலாற்றைக் கூறும் கண்ணேயும் கருத்தையும் கவரவல்ல விளக்கப்படங்களுடன் கூடிய நூல்களை மாணுக்கர்கள் விரும்புவர். எளிய இனிய நடையில் எழுதப்பெற்றுள்ள நம்நாட்டுக் காட்சிகளேயும், அயல்நாட்டுக் காட்சிகளையும் பழக்க வழக்கங்களையும் பற்றிய நூல்கள், பல்பொருள் பற்றியனவும் பல்வேறு நடைகள் கொண்டுள்ளனவுமான நூல்கள், எழிலுனர் ஆற்றலை வளர்க்கும் பலதிறப்பட்ட நூல்கள், பொது அறிவையும் பலதுறை அறிவையும் வளர்க்கும் நூல்கள் முதலிய வற்றை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தல்வேண்டும். ஒவ். வொரு நூலிலும் குறைந்தது ஐந்து படிகளாவது இருக்குமாறு நூல்களை வாங்கவேண்டும்.