பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 தமிழ் பயிற்றும் முறை

நூல்களை வாங்குவதில் ஆசிரியரின் பொறுப்பு : வகுப்பு நூலகத்திற்கு நூல்களேத் தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்கள் சில குறிப்புக்களை நினைவில் வைத்துக்கொண்டு நூல்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் உரி. யனவாகத் தேர்ந்தெடுக்கும் நூல்கள் மானுக்கர்களின் அறிவுநிலை, மனநிலை, பொருளறிவு, மனப்பான்மை ஆகிய. வற்றிற்குப் பொருத்தமானவைகளாக இருத்தல் வேண்டும். மாணுக்கர்களின் ஆர்வத்தைப் பிணைத்து இழுத்துச் செல்ல வல்ல கதைநூல்கள் இங்கு இடம்பெறல் வேண்டும். மாளுக்கர்கள் விரும்பிப்படிக்கும் நூல்களே வாங்கவேண்டுமேயன்றி, ஆசிரியர்கள் இன்னின்னவற்றைத்தான் படிக்க. வேண்டும் என்று வற்புறுத்தி நூல்களே வாங்குதல் தவறு. கீழ்வகுப்புக்களுக்குச் சிறு சிறு கதைகளேக் கொண்ட நூல்களும், மேல் வகுப்புக்களுக்குச் சிறு கதைச் செல்வங்களும் புதினங்களும் இருக்கலாம். பிஞ்சு மனங்களைக் குலேக்கும் நூல்களை அறவே நீக்குதல் வேண்டும். கீழ் வகுப்புக்களில் மாளுக்கர்கள் விரும்பிப் படிக்கும் நூல்களே வாங்கினுலும், மேல் வகுப்புக்களில் மாணுக்கர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கருதும் நூல்களே வாங்கலாம். கூடியவரை ஒருவராலேயே எழுதப்பெற்ற நூல்களாயிருப்பின் நன்று ; பலரால் எழுதப்பெற்றிருக்கும் பாட நூல்கள் போன்றவை கூடா. அகன்ற படிப்புக்குரிய இந்நூல்கள் இனிய எளிய துயநடையினேக் கொண்டனவாயும், எழுத்துப் பிழைகளும் ஏனேய பிழைகளுமின்றி அழகான கண்கவர் விளக்கப்படங்களைக் கொண்டிருப்பன வாகவும் இருத்தல் நன்று. வகுப்புக்கேற்ற பெரிய எழுத்துக்களில் நல்ல தாளில் அச்சிடப்பெற்றுப் புற, அகத் தோற்றங்களைக் கொண்டு நல்ல கட்டடம் அமைந்த நூல்களாக இருத்தல் அவசியம். தாமாகவே படித்தறிந்தோம் என்னும் மகிழ்ச்சியை அளிக்கத்தக்கன வாய், மானுக்கர்களுக்குப் படிப்பதில் ஆர்வம் எழுப்பக்கூடிய பொருள்களைப்பற்றிக் கூறுவன வாய் இருந்தால் சிறந்த நன்மை உண்டு. ஆசிரியர்கள் செய்தித் தாள்களில் வெளிவரும் மதிப்புரைகளே ப் படித்து ஒரு தனிக் குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும் ;