பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும்

திமிழ்ப் பயிற்றுவதன் நோக்கங்களே அறிந்த ஆசிரி யர்கள் அந்நோக்கங்களை நிறைவேற்றுவது எங்ங்னம் என்பதைச் சிந்திக்கவேண்டியது அவசியமாகும். அதற் கேற்ற ஒரு கல்வித் திட்டமும் அந்தத் திட்டத்தில் மொழிப் பாடத்திட்டமும் எங்ங்ணம் அமைக்கப்பெறல் வேண்டும் என்பதைப்பற்றிய ஒரு சில கருத்துக்களே ஈண்டு ஆராய்வோம்.

கல்வித் திட்டத்தைத் தக்கவாறு வகுத்துக் கொண்டுதான் கற்பித்தலைத் தொடங்கவேண்டும். தொடக்கநிலை, நடு நிலை, உயர்நிலப் பள்ளிகளுக்கேற்ற கல்வித் திட்டங்கள் நல்ல முறையில் உருவாக்கப் பெறுதல் வேண்டும். அவற்றை வகுப்பதில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்துக்களே ஏனைய ஆசிரியர்களைப் போலவே தாய்மொழி ஆசிரியர்களும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், தாய்மொழி பயிற்றுமொழியாக அமைந்த பிறகு அவர்கள்தான் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் என்பது தெரிய வரும். ஒவ்வொரு நிலைக்குரிய கல்வித்திட்டத்தில் தாய் மொழிப்பாடத்தின் இடம் என்ன ? தாய்மொழிப் பாடத்திட்டம் எவ்வாறு வகுக்கப்பெற வேண்டும் ? என்பன போன்ற விவரங்களையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இக்கருத்துக்களே அறியாது தாய்மொழியாசிரியர்கள் குழந்தைகட்குக் கற்பித்தால் அதில் பயன் ஒன்றும் இராது ; இவை தலையமைந்த யானைக்கு வினேயமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் அவர்கள்