பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 () தமிழ் பயிற்றும் முறை

தொட்ங்கிவிட்டது. எனினும், இந்தச் சோதனையை அடியோடு நீக்க வழியேயில்லை; கல்லூரி வகுப்புக்களில் இதுதான் இன்றும் ஆட்சி செலுத்திவருகின்றது. கல்வி நிபுணர்கள் இச் சோதனை சரியான அளவு கருவியல்ல என்பதைப் பல்லாண் டுகட்கு முன்னரே மெய்ப்பித்து விட்டனர். இதிலுள்ள குறைகளையும் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். முக்கியமான ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுக் கவனிப்போம்.

அளந்தறியும் எல்லேக் குறைவு : இதனுல் அளந்தறியக் கூடிய பொருளறிவு மிகக் குறைவு. சிறிய கால அளவில் ஆண்டு முழுவதும் படித்த பாட அறிவை ஐந்தாறு வினுக்" களைக் கொண்டு தேறிவிடமுடியும் என்று எண்ணுவது பொருந்தாததொன்று; அப்படி அளப்பதில் ஒரு சில முக்கிய எல்லேப் பரப்புக்களை மட்டிலும்தான் அறிய இயலும். ஒரு வினுவைத்" தவருகப் புரிந்துகொள்பவர் அல்லது அவ் விடையின் பகுதி கற்பிக்கப்பட்டபொழுது பள்ளிக்கு வராதிருந்தவர் சரியாக விடையிறுக்க முடியாது போதல் கூடும். இதல்ை அவரைப் பொருள் அறிவில் குறைவுள்ளவர் என்று முடிவு கட்டுதல் பொருந்தாது.

திருத்துவோரின் மனநிலை : தேர்வாளர்கள் மாளுக்கர்களின் விடையேடுகளை ஒரே பொது நோக்கமும் ஒரேவித நோக்கமும் கொண்டு திருத்துகின்றனர் என்று கூறுவதற்கில்லே. விடைகளின் தகுதியை யறிந்து ஏற்ற மதிப்பெண்களைக் கொடுப்பது தேர்வாளர்களின் மனநிலையையே பொறுத்துள்ளது என்பதற்கு எத்தனேயோ அனுபவங்கள் உள்ளன. முக்குண வசத்தால் முறை பிறழ்ந்துபோவதுடன் நில்லாது சினம், மகிழ்ச்சி முதலியவற்றிற்கேற்ப மதிப்பு எண்கள் குறைந்தும் மிகுந்தும் போதல்கூடும். இத்தகைய நிலைகளைக் கண்டு மாளுக்கர்கள் இல்லாள் ஊடி நின்றகலத்தில் இந்தத் தேர்வாளர் இவ்வாறு குறைவாக மதிப்பிட்டார் போலும்!” என்று எள்ளி நகையாடுவதை நாம் காணுமல் இல்லை. பேராசிரியர் பாலார்ட் இத்தகைய நிகழ்ச்சி ஒன்றினைத் தம் நூலில் குறிப்பிடுகின்ருர்."

  • Ballard P. B. The New Examiner. Lisi, 89.